எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
திருச்சி : விஜய் ஸ்ரீரங்கத்தில் போட்டியிடுகிறாரா என்ற எதிர்பார்ப்பு அனைவர் மத்தியிலும் ஏற்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக்கழக முதல் மாநாடு பிற அரசியல் கட்சிகளை மிரள வைத்தது. சமீபத்தில் அ.தி.மு.க. மற்றும் தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏக்கள், ஐ.ஆர்.எஸ். அதிகாரி போன்ற பிரபலங்கள் கட்சியில் இணைந்தது அக்கட்சியினருக்கு மேலும் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதனிடையே, வருகிற 22-ந் தேதி விஜய் பிறந்தநாளை விமரிசையாக கொண்டாட தமிழகம் முழுவதும் தொண்டர்கள் தயாராகி வருகின்றனர். திருச்சியிலும் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. வருகிற சட்டமன்றத் தேர்தலில் விஜய் எந்த தொகுதியில் போட்டியிடப் போகிறார் என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் திருச்சி மாநகர் மாவட்ட தொண்டர் அணி சார்பில் புத்தூர் நால்ரோடு உள்ளிட்ட பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டது. அதில் ஜூன் 22-ந்தேதி பிறந்தநாள் காணும் திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதி மக்களின் மனம் கவர்ந்த வேட்பாளரே வாழ்க பல்லாண்டு என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது.
இதனால் விஜய் ஸ்ரீரங்கத்தில் போட்டியிடுகிறாரா என்ற எதிர்பார்ப்பு அனைவர் மத்தியிலும் ஏற்பட்டுள்ளது. ஆனால் நிர்வாகிகள் தரப்பில் கேட்டபோது, மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். ஸ்ரீரங்கத்தில் போட்டியிட்டால் விஜய்யை வெற்றி பெற வைப்போம் என நம்பிக்கை தெரிவித்தனர்.
கடந்த மார்ச் மாதம் தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் தமிழக வெற்றி கழகத்தின் செல்வாக்கு தொடர்பான சர்வே நடத்தப்பட்டது. இதில் திருச்சி கிழக்கு, கடலூர், சிதம்பரம், கன்னியாகுமரி உள்ளிட்ட சில தொகுதிகள் அக்கட்சிக்கு பெரும் சாதகமாக இருப்பது தெரிய வந்தது. இதற்கிடையே திருச்சியை போன்று கடலூர், மதுரை போன்ற மாவட்டங்களிலும் விஜய் போட்டியிட வலியுறுத்தி அக்கட்சியினர்கள் சுவரொட்டி ஒட்டி உள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால் விஜய் எந்த தொகுதியில் போட்டியிடுகிறார் என இதுவரை உறுதியாகவில்லை என கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


