எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
குஜராத் : குஜராத் விமான விபத்தில் 2 விமானிகள் மற்றும் 10 ஊழியர்கள் உயிரிழந்துள்ளனர்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டன் காட்விக்கிற்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே மருத்துவமனை கட்டிட வளாகத்தில் விழுந்து நொறுங்கியது. இதில் விமானத்தில் பயணம் செய்த 242 பேரில் 241 பேர் உயிரிழந்தனர். ஒருவர் மட்டுமே உயிர் பிழைத்தார்.
விபத்தில் இரண்டு விமானிகள், 10 பணியாளர்களும் உயிரிழந்தனர். மணிப்பூரைச் சேர்ந்த இரண்டு விமான பணிப்பெண்கள் இதில் அடங்குவார்கள். அதில் ஒருவர் லாம்னுந்தெம் சிங்சன் என்ற 26 வயது பெண் ஆவார். மணிப்பூர் வன்முறையால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில், இவருடைய ஒருவரின் வருமானத்தை வைத்துதான் குடும்பத்தினர் வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில்தான் இந்த துயர விபத்து ஏற்பட்டுள்ளது.
லாம்னுந்தெம் சிங்சன் உடன் பிறந்தவர்கள் 3 சகோதரர்கள். தந்தை இறந்த நிலையில் விதவை தாய் உடன் வாழ்ந்து வந்துள்ளார். மூத்த சகோதரர் நீண்ட நாள் நோய் காரணமாக வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். தாயும் எந்த வேலைக்கும் செல்லவில்லை. இரண்டு சகோதரர்கள் படித்து வருகிறார். இவரது வருமானத்தை வைத்தான் வாழ்ந்து வந்துள்ளனர். தனது தாயாரிடம் லண்டனுக்கு செல்ல இருக்கிறேன். அதனால் முன்னதாக தூங்கச் செல்கிறேன் என பேசியுள்ளார். அதன்பின்தான் இந்த துயர சம்பவம் நடைபெற்றுள்ளது.
அவரது சகோதரர் நோயால் பாதிக்கப்பட்ட போதிலும் குஜராத் அகமதாபாத் விரைந்துள்ளார். அவரின் மற்றொரு சகோதரர் மற்றும் உறவினர் நாகலாந்து திமாபூர் சென்று அங்கிருந்து அகமதாபாத் செல்ல இருக்கிறார். இந்தச் செய்தியால் நாங்கள் மிகவும் மனமுடைந்து போனோம். விபத்து பற்றிய செய்திகள் வெளியானதிலிருந்து அவரது தாயார் மிகுந்த அதிர்ச்சியில் இருக்கிறார், சாப்பிட மறுத்துவிட்டார் என உறவினர் கிப்ஜென் தெரிவித்துள்ளார். விமானப் பணிப்பெண்ணின் தாயாராக்கு போன் செய்த ஏர் இந்தியா அதிகாரிகள், உடல் இன்னும் அடையாளம் காணப்படவில்லை எனத் தெரிவித்துள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


