முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அகமதாபாத் விமான விபத்து: காப்பீட்டு நிறுவனங்கள் வழங்கும் இழப்பீட்டு தொகை ரூ.1,290 கோடி

வெள்ளிக்கிழமை, 13 ஜூன் 2025      இந்தியா
ahmedabad-plane-crash-2

Source: provided

அகமதாபாத் : அகமதாபாத் விமான விபத்தில் ரூ.1,290 கோடி இழப்பீட்டை காப்பீட்டு நிறுவனங்கள் வழங்க வேண்டும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

அகமதாபாத்தில் ஏர்-இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதை தொடர்ந்து இந்திய காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் உலகளாவிய மறுகாப்பீட்டாளர்கள் 120 மில்லியன் முதல் 150 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.1,000 கோடி முதல்-1,292 கோடி) வரை இழப்பீடு வழங்க வேண்டியதிருக்கும் என்று விமான காப்பீட்டு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் சிக்கிய விமானத்துக்கு இழப்பீடாக 80 மில்லியன் டாலர்களும் (ரூ.689 கோடி), பயணிகள் மற்றும் 3-ம் தரப்பு இழப்பீடுகளில் 40 மில்லியன் முதல் 50 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை இழப்பீடுகள் கோருவதற்கான வாய்ப்புகள் உள்ளது என்று தெரிவித்துள்ளனர். டாடா ஏ.ஐ.ஜி. ஜெனரல் இன்சூரன்ஸ் மற்றும் லண்டன் மறுகாப்பீட்டாளர்கள் தலைமையிலான இந்திய காப்பீட்டு நிறுவனங்கள் இந்த இழப்பீட்டு தொகைகளை செலுத்த வேண்டியதிருக்கும்.

அதேவேளையில் விமானக் கொள்கைகளின்படி மறுகாப்பீட்டாளர்கள் கணிசமான தொகையை செலுத்தும் வகையில் விதிகள் கட்டமைக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த இழப்பீட்டு கோரிக்கைகளில் பெரும்பாலானவை உலகளாவிய மறுகாப்பீட்டு நிறுவனங்களால் ஏற்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து