முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரேஷன் கடைகளில் கைரேகை பதிவு 70 சதவீதமாக குறைப்பு

ஞாயிற்றுக்கிழமை, 15 ஜூன் 2025      தமிழகம்
Ration-shop

Source: provided

சென்னை : கூட்டுறவு துறை மூலம் மத்திய உணவுத்துறையிடம் வேண்டுகோள் வைக்கப்பட்டு ரேஷன் கடைகளில் கைரேகை பதிவின் 90 சதவீதம் துல்லியத்தை 70 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. 

தமிழகம் முழுவதும் 26 ஆயிரத்து 618 முழுநேர கடைகள், 10 ஆயிரத்து 710 பகுதிநேர கடைகள் என மொத்தம் 37 ஆயிரத்து 328 ரேஷன் கடைகள் இயங்கி வருகின்றன. இந்த ரேஷன் கடைகளில் மின்னணு விற்பனை (பி.ஓ.எஸ்.) கருவி மூலம் பொருட்கள் வினியோகத்திற்கான ரசீது வழங்கப்பட்டு வருகிறது.

இந்த மின்னணு எந்திரத்தில் ரேஷன் அட்டை உறுப்பினர்கள் கைரேகை வைத்தால் மட்டுமே ரசீதுபோடும் வகையில் பி.ஓ.எஸ். கருவியின் மென்பொருள் வடிவமைக்கப்பட்டு இருந்தது. இந்த கைரேகையானது ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்டுள்ள ஆதார் அட்டைகளில் உள்ள கைரேகையுடன் ஒத்துப்போனால் மட்டுமே பொருட்கள் வழங்கப்படும்.

அதன்படி, ஆரம்ப காலத்தில் இந்த கைரேகை பதிவானது 40 சதவீதம் அளவிற்கு இருந்தாலே பொருட்களை வினியோகம் செய்ய முடிந்தது. இந்த நிலையில் திடீரென இந்த கைரேகை பதிவானது 90 சதவீதம் துல்லியமாக ஒத்துப்போனால் மட்டும்தான் பொருட்களை வினியோகம் செய்யப்பட்டது.

இதனால், பெரும்பாலான கைரேகை பதிவுகளுக்கு குறைந்தபட்சம் 2, 3 முறையாவது கை விரலை வைக்க வேண்டியது உள்ளது. இதனால், காலவிரயம் ஏற்பட்டு வருகிறது. இது ஒருபுறம் இருக்க, கைரேகை பதிவு சரியாக இல்லாதபட்சத்தில், கருவிழி பதிவு கருவி மூலம் சரிபார்க்கப்பட்டு ரேஷன் பொருட்கள் வினியோகிக்கப்படுகின்றன. இதனால் இன்னும் கூடுதல் நேரம் ஆகிறது.

எனவே, கூட்டுறவு துறை மூலம் மத்திய உணவுத்துறையிடம் வேண்டுகோள் வைக்கப்பட்டு கைரேகை பதிவின் 90 சதவீதம் துல்லியத்தை 70 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால், தற்போது ரேஷன் கடைகளில் வழக்கத்தை விட அதிகமான பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்படுகிறது. மேலும், 70 சதவீதம் கைரேகை ஒப்புதலை இன்னும் 10 சதவீதம் குறைப்பதற்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து ரேஷன்கடை ஊழியர்கள் கூறும்போது, "தற்போது, கைரேகை பதிவு ஒருமுறை வைத்தாலே போதும் என்ற நிலைக்கு வந்துள்ளதால் முன்பைவிட சற்று வேகமாக பில் போட முடிகிறது. இருப்பினும் எடை எந்திரத்துடன் பி.ஓ.எஸ்.கருவி இணைப்பு மற்றும் இணைதள வேகம் குறைவு காரணமாகவும் காலவிரயம் ஆகிறது. அதற்கும் தீர்வு கண்டால் சரியாக இருக்கும்" என்று தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து