முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போர்க்களங்களில் தீர்வு கிடைக்காது: குரோஷியாவில் பிரதமர் மோடி பேச்சு

வியாழக்கிழமை, 19 ஜூன் 2025      உலகம்
Modi 2024-12-04

ஜாக்ரெப், 'ஜனநாயகத்தில் பயங்கரவாதம் விரோதமானது. தீர்வு காண பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திரம் மட்டும் ஒரே வழி'' என குரோஷியாவில் பிரதமர் மோடி பேசுகையில் தெரிவித்தார்.

மூன்று நாள் அரசு முறை பயணத்தின் இறுதி கட்டமாக, ஐரோப்பிய நாடான குரோஷியாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி  சென்றடைந்தார். விமான நிலையத்தில் அளிக்கப்பட்ட உற்சாக வரவேற்புக்கு, பிரதமர் மோடி சமூக வலைதள பக்கத்தில் நன்றி கூறியுள்ளார்.

 ஜாக்ரெபில் உள்ள ஹோட்டலுக்கு சென்ற மோடிக்கு, அங்குள்ள இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். குரோஷியா பிரதமர் ப்ளென்கோவிக்யை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். குரோஷியா அதிபர் ஜோரன் மிலன்நோவிக்கை மோடி சந்தித்து பேசினார். அப்போது இருநாட்டு தலைவர்களும் பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர்.

பின்னர் நிருபர்கள் சந்திப்பில் பிரதமர் மோடி கூறியதாவது: ஜனநாயகத்தில் பயங்கரவாதம் விரோதமானது. ஐரோப்பாவிலோ அல்லது ஆசியாவிலோ போர்க்களங்களில் இருந்து தீர்வுகளை காண முடியாது. பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திரம் மட்டுமே ஒரே வழி என்பதை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம்.   மருந்து, விவசாயம், தகவல் தொழில்நுட்பம் போன்ற பல முக்கியமான துறைகளில் ஒத்துழைப்பை ஊக்குவிப்போம். இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து