முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸுக்கு ஆஸ்கர் விருது அறிவிப்பு

வியாழக்கிழமை, 19 ஜூன் 2025      உலகம்
Oscar 2025-01-09

Source: provided

லாஸ் ஏஞ்சல்ஸ்: திரைத்துறைக்கு ஆற்றிய பங்கிற்காக பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸுக்கு ஆஸ்கர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. வருகிற நவம்பர் மாதம் 16-ம் தேதி நடைபெறும் ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் அவருக்கு விருது வழங்கப்படவுள்ளது.

பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸ். ஹாலிவுட் சினிமாவில் தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ள இவர் ஸ்டண்ட் காட்சிகளை மிகவும் சாதாரணமாக செய்து முடிப்பவர். இவரது நடிப்பில் வெளியான மிஷன் இம்பாசிபிள் வரிசை படங்களுக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். டாம் க்ரூஸின் அதிரடியான ஆக்ஷன் காட்சிகளுக்காகவே பிரபலமான அவரது 'மிஷன்: இம்பாஸிபிள்' திரைப்பட வரிசையில் 8-வது பாகமான, 'மிஷன்: இம்பாஸிபிள்- தி ஃபைனல் ரெக்கனி' வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

உலகம் முழுவதும் பல மொழிகளில் வெளியான இப்படம் இந்தியாவிலும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழிகளில் வெளியாகி வசூல் குவித்து வருகிறது. இதனை தொடர்ந்து 'மிஷன்: இம்பாஸிபிள்- தி ஃபைனல் ரெக்கனி' பட சண்டை காட்சிக்காக நடிகர் டாம் க்ரூஸ் கின்னஸ் சாதனையாளராகி உள்ளார். இப்படத்தில் எரியும் பாராசூட்டில் இருந்து அதிக முறை (16) குதித்த நபர் என்ற சாதனையை தன்வசப்படுத்தி இருந்தார்.

இந்த நிலையில், பல்வேறு சாதனைனகளுக்கும், விருதுகளுக்கும் சொந்தக்காரரான டாம் க்ரூஸ் திரைத்துறைக்கு ஆற்றிய பங்கிற்காக அவருக்கு கவுரவ ஆஸ்கர் விருது வழங்கப்படும் என அகாடமி ஆப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் அமைப்பு அறிவித்துள்ளது. டாம் குரூஸுடன் இணைந்து டெபி ஆலன், வின் தாமஸ் மற்றும் டோலி பார்டன் ஆகியோருக்கும் கவுரவ ஆஸ்கர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருது வழங்கும் விழா வருகிற நவம்பர் மாதம் 16-ம் தேதி நடைபெறவுள்ளது. கவர்னர்ஸ் விருது என்று அழைக்கப்படும் இந்த ஆஸ்கர் விருதானது 35 வருடங்களுக்கு பிறகு டாம் குரூஸுக்கு கிடைப்பது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து