முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

‘புற்றுநோய் போன்ற நாடு’ இஸ்ரேல் மீது வட கொரியா குற்றச்சாட்டு

வியாழக்கிழமை, 19 ஜூன் 2025      உலகம்
KIM 2023 03 15

Source: provided

தெஹ்ரான்: இஸ்ரேல் வான்வழி தாக்குதல் கொடூரமான செயல் என்று வட கொரியா கண்டனம் தெரிவித்துள்ளது.

ஈரான் மீதான இஸ்ரேலின் சமீபத்திய வான்வழித் தாக்குதலை "கொடூரமான ஆக்கிரமிப்புச் செயல்" என்று வட கொரியா கண்டித்துள்ளது. இது மேற்கு ஆசியாவில் மிகப் பெரிய போரை ஏற்படுத்தும் அபாயம் இருப்பதாகவும் வடகொரியா எச்சரித்துள்ளது.

இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான தீவிரமான போர் நேற்று ஏழாவது நாளை எட்டியது. இந்த நிலையில், வடகொரிய அரசு நடத்தும் செய்தி நிறுவனமான கே.சி.என்.ஏ. வெளியிட்ட அறிக்கையை மேற்கோள் காட்டியுள்ள யோன்ஹாப் நாளிதழின் செய்தியில், அமெரிக்கா மற்றும் மேற்கு நாடுகளின் ஆதரவுடன் செயல்படும் இஸ்ரேல், மேற்கு ஆசியாவில் அமைதியை சீர்குலைக்கும் ‘புற்றுநோய் போன்ற நாடு’ என்று தெரிவித்துள்ளது.

கே.சி.என்.ஏ. தனது அறிக்கையில், வட கொரிய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர், ஈரானுக்கு எதிரான இஸ்ரேலின் ராணுவத் தாக்குதல் குறித்து கடுமையான கவலைகளை எழுப்பினார். மேற்கு ஆசியாவில் முழுமையான போரின் அபாயத்தை இஸ்ரேல் எழுப்பியதற்காக கண்டனம் தெரிவித்தார் ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதல் ஒரு நாட்டின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை மீறுவதாகவும், இது "மனிதகுலத்துக்கு எதிரான மன்னிக்க முடியாத குற்றம்" என்றும் செய்தித் தொடர்பாளர் கூறினார்.

மேலும், அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளால் ஆதரிக்கப்படும் இஸ்ரேல், மத்திய கிழக்கில் அமைதியை சீர்குலைக்கும் புற்றுநோய் போன்ற அமைப்பாகவும், உலகளாவிய அமைதி மற்றும் பாதுகாப்பை அழிப்பதில் முக்கிய குற்றவாளியாகவும் இருப்பதை தெளிவாக நிரூபிக்கிறது என்று வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் கூறினார்’ என்று தெரிவித்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து