முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சோதனையின் போது வெடித்து சிதறிய ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்

வியாழக்கிழமை, 19 ஜூன் 2025      உலகம்
Space-x

Source: provided

டெக்சாஸ்: அமெரிக்காவில் சோதனை முயற்சியின் போது ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட் வெடித்து சிதறியது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

உலகின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், ஸ்டார்ஷிப் ராக்கெட்டின் பூஸ்டரை பத்திரமாக தரையிறக்கும் நோக்கத்துடன் அடுத்தடுத்து ஸ்டார்ஷிப் ராக்கெட் சோதனையை செய்து அசத்தி வருகிறது. அந்த வகையில், அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஏவுதளத்தில் இருந்து, ஸ்டார்ஷிப் 36 ராக்கெட் விண்ணில் செலுத்தும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அப்போது, ராக்கெட் ஏவுவதற்கு முன்பே, சோதனை கட்டத்திலேயே வெடித்து சிதறியது. இதனால், தீப்பிழம்பு ஏற்பட்டது. இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்பவில்லை என்று ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

கடந்த ஜனவரி மற்றும் மார்ச் மாதங்களில் நிகழ்ந்த இரு சோதனைகள் தோல்வியடைந்தன. தற்போது, 3-வது முறையாக மேற்கொள்ளப்பட்ட முயற்சியும் தோல்வியில் முடிந்துள்ளது. இது விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் எலான் மஸ்கின் திட்டத்திற்கு மிகப்பெரிய பின்னடைவாக உள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து