முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு: டெல்லியில் அவசரமாக தரையிறங்கிய விமானம்

வியாழக்கிழமை, 19 ஜூன் 2025      இந்தியா
Air

Source: provided

புதுடில்லி: 180 பேருடன் பயணித்த இண்டிகோ விமானம், நடுவானில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால் டில்லியில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

டில்லியில் இருந்து லே விமான நிலையத்துக்கு நேற்று  காலை 180 பயணிகளுடன் இண்டிகோவின் 6இ 2006 விமானம் புறப்பட்டுச் சென்றது. லே விமான நிலையத்தில் தரையிறங்க முயன்றபோது தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து விமானம் டில்லிக்கு மீண்டும் திருப்பி விடப்பட்டது.

டில்லி விமான நிலையத்தில் விமானம் தரையிறக்கப்பட்டது. விமானத்தில் பயணித்த பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். டில்லியில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. பயணிகளுக்கு மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என இண்டிகோ விமான நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஆகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்துக்கு பிறகு கடந்த 7 நாள்களில், அதிக விமானங்கள் தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவசரமாக தரையிறக்கம் செய்யப்படுவது பயணிகள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து