முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியா - இங்கி., முதல் டெஸ்ட் போட்டி இன்று லீட்சில் துவக்கம்

வியாழக்கிழமை, 19 ஜூன் 2025      விளையாட்டு
ind-eng

Source: provided

லீட்ஸ்: இந்தியா - இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டி, லீட்சில் இன்று தொடங்க உள்ளது.

 முதல் டெஸ்ட் போட்டி... 

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி லீட்சில் இன்று தொடங்க உள்ளது. இது 4-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சிக்கு உட்பட்ட தொடர் என்பதால் இரு அணிகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

ஆவலுடன்...

கேப்டன் ரோகித் சர்மா, நட்சத்திர வீரர் விராட் கோலி ஆகியோர் கடந்த மாதம் டெஸ்டில் இருந்து விடைபெற்றதால் புதிய கேப்டன் சுப்மன் கில் தலைமையில் இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி இந்த தொடரில் களம் இறங்குகிறது. 2007-ம் ஆண்டுக்கு பிறகு இந்திய அணி இங்கிலாந்தை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி டெஸ்ட் தொடரை வென்றதில்லை என்ற நிலையை மாற்றுமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.

 'பட்டோடி' பெயரில்... 

முன்னதாக 2007-ம் ஆண்டு முதல் இங்கிலாந்தில் நடைபெறும் இந்தியா- இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் வெற்றி பெறும் அணிக்கு மறைந்த இந்திய முன்னாள் கேப்டனான 'பட்டோடி' பெயரில் கோப்பை வழங்கப்பட்டு வந்தது. இதனை மாற்ற இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் முடிவு செய்தது. அதற்கு பி.சி.சி.ஐ.-யும் ஒப்புக்கொண்டது. அதன்படி இனி வரும் இங்கிலாந்து- இந்தியா டெஸ்ட் தொடருக்கு அந்த பெயர் மாற்றப்பட்டு 'ஆண்டர்சன் - தெண்டுல்கர்' என்ற பெயரில் கோப்பை வழங்கப்பட உள்ளது. அதேநேரத்தில் இந்த தொடரில் வெற்றி பெறும் அணியின் கேப்டனுக்கு 'பட்டோடி' பெயரில் பதக்கம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிமுக நிகழ்ச்சி...

டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்ட ஜாம்பவான் வீரர்களான சச்சின் தெண்டுல்கர் (இந்தியா) மற்றும் ஜேம்ஸ் ஆண்டர்சனை (இங்கிலாந்து) கவுரவிக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. இருப்பினும் இதற்கு சுனில் கவாஸ்கர் கவாஸ்கர் உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் 'ஆண்டர்சன் - தெண்டுல்கர்' கோப்பை அறிமுக நிகழ்ச்சி லீட்சில் நேற்று நடைபெற்றது. இதில் சச்சின் தெண்டுல்கர் மற்றும் ஜேம்ஸ் ஆண்டர்சன் இருவரும் ஒன்றாக இணைந்து கோப்பையை அறிமுகம் செய்து வைத்தனர். இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து