எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
துபாய், : உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ளது. இதில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் முறையே 100 சதவீத புள்ளிகளுடன் முதல் 2 இடங்களில் உள்ளன.
சுற்றுப்பயணம்....
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி இவ்விரு அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பார்படாசில் நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலிய அணி 159 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
2 இடங்களில்....
இதனையடுத்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ளது. இதில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் முறையே 100 சதவீத புள்ளிகளுடன் முதல் 2 இடங்களில் உள்ளன. இதனையடுத்து தலா 33.33. சதவீத புள்ளிகளுடன் வங்காளதேசம் 3-வது இடத்திலும், இலங்கை 4-வது இடத்திலும் உள்ளன. இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் தோல்வியடைந்த இந்தியா இன்னும் புள்ளி கணக்கை தொடங்காமல் 5-வது இடத்தில் உள்ளது.
புள்ளி கணக்கை...
அதேபோல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தோல்வி கண்ட் வெஸ்ட் இண்டீஸ் அணியும் இன்னும் புள்ளி கணக்கை தொடங்காமல் 6-வது இடத்தில் உள்ளது. இதில் இடம்பெற்றுள்ள மற்ற அணிகளான நியூசிலாந்து, பாகிஸ்தான், நடப்பு சாம்பியன் தென் ஆப்பிரிக்கா ஆகியவை 2025-27 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில் இன்னும் டெஸ்ட் போட்டிகளில் ஆடவில்லை. இதனால் அந்த அணிகளுக்கு இன்னும் புள்ளிகள் கொடுக்கப்படவில்லை.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


