எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை: எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப்பயண தொடக்க விழாவில் பங்கேற்க கூட்டணியில் அங்கம் வகிக்கும் பா.ஜ.க.வுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது
தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடக்க உள்ளதையொட்டி அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலுக்கு தயாராகி வருகின்றன. அந்த வகையில் எதிர்க்கட்சியான அ.தி.மு.க. மீண்டும் அரியணையில் ஏறும் முனைப்பில் தேர்தல் பணிகளை தொடங்கி விட்டது. அதன் ஒரு பகுதியாக அ.தி.மு.க.. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 'மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்' என்ற பெயரில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.
தனது முதற்கட்ட சுற்றுப்பயணத்தை எடப்பாடி பழனிசாமி வருகிற 7-ந்தேதி கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சட்டசபை தொகுதியில் இருந்து தொடங்குகிறார். முதற்கட்ட சுற்றுப்பயணத்தை வருகிற 23-ந்தேதி ஒரத்தநாடு, பேராவூரணி, பட்டுக்கோட்டை சட்டசபை தொகுதிகளில் எடப்பாடி பழனிசாமி நிறைவு செய்கிறார்.
இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப்பயண தொடக்க விழாவில் பங்கேற்க கூட்டணியில் அங்கம் வகிக்கும் பா.ஜ.க.வுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க.வின் இந்த அழைப்பை ஏற்று வருகிற 7-ந்தேதி மேட்டுப்பாளையத்தில் நடக்கும் தொடக்க விழாவில் பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், பொதுச்செயலாளர் ஏ.பி.முருகானந்தம் மற்றும் பா.ஜ.க.வினர் பங்கேற்க உள்ளனர்.
இதுதவிர எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஒவ்வொரு சட்டசபை தொகுதிகளிலும் அதிமுகவினர் மட்டுமின்றி, அந்த பகுதியை சேர்ந்த பா.ஜ.க. தலைவர்களும் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


