Idhayam Matrimony

கார் விபத்தில் போர்ச்சுகல் கால்பந்து வீரர், சகோதரர் பலி திருமணமான 10 நாட்களில் சோகம்

வியாழக்கிழமை, 3 ஜூலை 2025      விளையாட்டு
Accident-1

Source: provided

லிஸ்பன்: லம்போர்கின் கார் டயர் வெடித்த விபத்தில் கால்பந்து வீரர்கள் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

 கால்பந்து வீரர்... 

ஸ்பெயினின் ஜமோரா நகரில் நடந்த கார் விபத்தில் போர்ச்சுகல் கால்பந்து வீரர் டியாகோ ஜோட்டா (28), அவரது சகோதரர் ஆண்ட்ரே சில்வா (26) இருவரும் பரிதாபமாக பலியாகினர். போர்ச்சுகல் எல்லைக்கு அருகில் மேற்குப்புற ஸ்பெயினின் சமோரா பகுதியில் நடந்த கார் விபத்தில் லிவர்பூல் கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் டியாகோ ஜோட்டா மற்றும் அவரது சகோதரர் ஆண்ட்ரே சில்வா இருவரும் பரிதாபமாக பலியாகினர்.

டயர் வெடித்து.... 

டியாகோ ஜோட்டா மற்றும் அவரது சகோதரர் ஆண்ட்ரே சில்வா இருவரும் தங்களது சொகுசு லம்போர்கினி காரில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது முன்னாள் சென்று கொண்டிருந்த காரை முந்த முயன்றபோது, இவர்களின் காரின் டயர் வெடித்து விபத்துக்குள்ளாகியுள்ளது. சாலையில் இருந்து பல அடி தூரம் உருண்ட இவர்களது கார் பின்னர் தீப்பிடித்துள்ளது. தீயணைப்பு வீரர்கள் வந்தும் இவர்கள் இருவரையும் காப்பாற்ற முடியவில்லை. இதில், சகோதரர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

47 கோல்கள்.... 

அட்லெடிகோ மாட்ரிட், எஃப்சி போர்டோ மற்றும் வால்வர்ஹாம்ப்டன் வாண்டரர்ஸ் அணிகளுக்காகவும் விளையாடியுள்ளார் ஜோட்டா. 2020 ஆம் ஆண்டு பிரபலமான லிவர்பூர் அணி இவரை 45 மில்லியன் யூரோக்களுக்கு ஒப்பந்தம் செய்தது. ஜோட்டா லிவர்பூல் அணிக்கு 47 கோல்கள் அடித்துள்ளார். மேலும், பிரீமியர் லீக், எஃப்ஏ கோப்பை மற்றும் இரண்டு கரபோ கோப்பைகளையும் வெல்ல உதவினார்.

10 நாட்களிலேயே.... 

ஜோட்டாவுக்கு இரண்டு வாரங்களுக்கு முன்புதான் ஜூன் 22 ஆம் தேதி திருமணம் நடந்தது. இவர் தனது சிறுவயது காதலியான ரூட் கார்ட்சோவைத் திருமணம் செய்திருந்தார். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். திருமணமான 10 நாட்களிலேயே கால்பந்து வீரர் கார் விபத்தில் பலியான சம்பவம் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து