முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அஜித்குமார் கொலை வழக்கு: த.வெ.க. கோரிக்கையை நிராகரித்தது ஐகோர்ட்

வெள்ளிக்கிழமை, 4 ஜூலை 2025      தமிழகம்
chennai-high-court 2022-08-29

Source: provided

சென்னை : மடப்​புரம் கோயில் காவலர் அஜித்குமார் காவல்துறை விசாரணையில் கொல்லப்பட்டதைக் கண்டித்து த.வெ.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி வழங்கக் கோரிய மனுவை அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

சிவகங்கை மாவட்​டம், திருப்​புவனம் காவல் நிலைய எல்​லைக்கு உட்​பட்ட மடப்​புரம் கோவில் காவலர் அஜித்குமார் மரணத்​துக்கு நீதி கேட்​டும், உயர் நீதி​மன்​றத்​தின் நேரடிக் கண்​காணிப்​பின் கீழ் சிறப்​புப் புல​னாய்​வுக் குழு அமைத்து நீதி விசா​ரணை நடத்த வேண்​டும் என வலியுறுத்தியும், கடந்த 4 ஆண்​டு​களில் 24 பேர் காவல் நிலை​யத்​தில் மரணம் அடைந்​தது குறித்து உயர் ​நீ​தி​மன்​றமே அதிருப்தி தெரி​வித்​துள்ள நிலை​யில், இதுகுறித்​து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளி​யிட வலி​யுறுத்​தி​யும் தமிழக வெற்​றிக் கழகத்​தின் சார்​பில் ஆர்ப்​பாட்​டம் அறிவிக்​கப்​பட்டிருந்​தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு காவல்துறை அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வேல்முருகன்  முன்பு நேற்று (ஜூலை 4) த.வெ.க. சார்பில் ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி கோரும் மனுவை இன்று பிற்பகலில் விசாரணைக்கு எடுக்கக் கோரி முறையிடப்பட்டது. இதனை ஏற்க மறுத்த நீதிபதி, “இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க என்ன அவசரம்?” என்று கேள்வி எழுப்பினார். இந்த மனு எண்ணிடப்பட்டு வந்தால், திங்கள்கிழமை விசாரணைக்கு எடுக்கப்படும், என்று நீதிபதி தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து