Idhayam Matrimony

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் கோவிலில் இன்று மகா கும்பாபிஷேகம் * லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர் * பாதுகாப்பு பணியில் 6 ஆயிரம் போலீசார் குவிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 6 ஜூலை 2025      தமிழகம்
Tiruchendur 2024-08-25

Source: provided

திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மகா கும்பாபிஷேக விழா இன்று (திங்கட்கிழமை) கோலாகலமாக நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்ள அங்கு லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். பாதுகாப்பு பணிக்கு 6 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு நடைபெறுகிறது.

யாகசாலை மண்டபத்தில்....

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மகா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு ராஜகோபுர அடிவாரத்தில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ள யாகசாலை மண்டபத்தில் கடந்த 1-ம் தேதி முதல் யாகசாலை பூஜைகள் தொடங்கியது. தினமும் காலை, மாலை என ஒவ்வொரு கால யாகசாலை பூஜைகள் நடைபெற்று வருகின்றன. கடந்த 2 நாட்களாக தங்க முலாம் பூசப்பட்ட சுவாமி மூலவர், சண்முகர், வள்ளி, தெய்வானை உள்பட விமான கோபுர கலசங்கள் விமானதளத்திற்கு கொண்டுவரப்பட்டு, அதில் வரகு நிரப்பப்பட்டு மீண்டும் அந்தந்த சுவாமி விமானத்தில் பொருத்தப்பட்டன.

மகா தீபாராதனை...

நேற்று முன்தினம் காலை 8-ம் கால யாகசாலை பூஜை, மாலையில் 9-ம் கால யாகசாலை பூஜை, மகா தீபாராதனை நடந்தது. இதுதவிர மாலையில் சுவாமி பெருமாளுக்கு முதல் கால யாகசாலை பூஜை தொடங்கியது. சுவாமி சண்முகர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு நேற்று காலை 10-ம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. தொடர்ந்து மாலையில் 11-ம் கால யாகசாலை பூஜையும் நடக்கிறது. இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 12-ம் கால யாகசாலை பூஜை நடக்கின்றது. காலை 6.15 மணிக்கு மேல் 6.50 மணிக்குள் ராஜகோபுரம் கும்ப கலசங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. 

தடுப்பு வேலிகள்... 

அதேநேரத்தில் மூலவர், சண்முகர், வள்ளி, தெய்வானை, பெருமாள், நடராஜர் மற்றும் அனைத்து பரிவார மூர்த்தி சுவாமிகளுக்கும் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. கும்பாபிஷேக ஏற்பாடுகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன. பக்தர்கள் எந்தவித நெருக்கடியும் இன்றி விழாவை காணும் வகையில் கோவில் கடற்கரையில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு உள்ளன. அங்கு பாதுகாப்பு கருதி மின் விளக்குகள் மற்றும் கண்காணிப்பு கோபுரங்களும் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. அதேபோல் கும்பாபிஷேகத்தை பல்வேறு இடங்களில் இருந்து பக்தர்கள் நேரலையில் காணும் வகையில் எல்.இ.டி. திரைகள் அமைக்கப்பட்டு இருக்கின்றன.

6 ஆயிரம் போலீசார்... 

பக்தர்கள் மீது புனிதநீர் தெளிப்பதற்காக டிரோன் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. மொத்தம் 20 டிரோன்கள் இதற்காக தயார் நிலையில் உள்ளன. இதன் செயல்பாடுகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட்ஜான் நேரில் பார்வையிட்டார். மேலும் பாதுகாப்பு ஏற்பாடுகள், போலீஸ் கட்டுப்பாட்டு அறையையும் ஆய்வு செய்தார். பாதுகாப்பு பணியில் 6 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. பக்தர்கள் வசதிக்காக பல்வேறு ஊர்களில் இருந்து திருச்செந்தூருக்கு சிறப்பு பஸ்களும் இயக்கப்படுகின்றன. இதற்காக திருச்செந்தூரில் 3 தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

ட்ரோன் மூலம் புனிதநீர் தெளிப்பு

திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கும்பாபிஷேகம் இன்று திங்கட்கிழமை காலை 6:15 முதல் 6:50 மணிக்குள் நடக்கிறது. 10 லட்சம் பக்தர்கள் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது. கும்பாபிஷேகத்தில் பங்கேற்கும் பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்படுவது வழக்கம். இந்த முறை ட்ரோன் மூலம் புனிதநீர் தெளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான சோதனை ஓட்டம் நடந்தது. மொத்தம், 20 இடங்களில் பெரிய அளவிலான ட்ரோன் கொண்டு பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து