Idhayam Matrimony

அன்புமணி தலைமையிலான கூட்டத்தில் கூட்டணி குறித்து முடிவெடுக்க வாய்ப்பு?

செவ்வாய்க்கிழமை, 8 ஜூலை 2025      தமிழகம்
Anbumani 2024-12-29

Source: provided

 சென்னை : அன்புமணி நடத்தும் கூட்டத்தில், வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ம.க. யாருடன் கூட்டணி அமைக்கவுள்ளது தொடர்பாக முடிவெடுக்கப்படும் என்று கூறப்படுகிறது. 

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், ஓமந்தூரில் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநிலச் செயற்குழுக் கூட்டம் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற நிலையில், சென்னையில் பொறுப்பாளர்கள் கூட்டத்தை பா.ம.க. தலைவர் அன்புமணி நடத்துகிறார்.

அன்புமணி நடத்தும் கூட்டத்தில், வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ம.க. யாருடன் கூட்டணி அமைக்கவுள்ளது தொடர்பாக முடிவெடுக்கப்படும் என்று கூறப்படுகிறது. அதேபோல், ஓமந்தூரில் பாட்டாளி மக்கள் கட்சியின் செயற்குழுக் கூட்டத்திலும் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ராமதாஸ் தலைமையிலான கூட்டத்தில் கெளரவத் தலைவர் ஜி.கே.மணி, பொதுச்செயலர் முரளிசங்கர், இணைப்பொதுச்செயலரும், எம்எல்ஏவுமான அருள், பொருளாளர் சையத் மன்சூர் உசேன், வன்னியர் சங்கத் தலைவர் பு.தா.அருள்மொழி, பா.ம.க. முன்னாள் மாநிலத் தலைவர் தீரன், முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்று உள்ளனர்.

பா.ம.க.வில் நடைபெறும் இந்த இரு கூட்டங்களிலும் வரும் பேரவைத் தேர்தல் தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து