முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போலீஸ் காவலில் மரணம் அஜித்குமார் வழக்கு: ஆகஸ்ட் 20-க்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்: சி.பி.ஐ.க்கு ஐகோர்ட் கிளை உத்தரவு

செவ்வாய்க்கிழமை, 8 ஜூலை 2025      தமிழகம்
MDU-High-Court 2023-02-16

மதுரை, போலீஸ் காவலில் அஜித்குமார் உயிரிழந்த வழக்கில் ஆகஸ்ட் 20-ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று சி.பி.ஐ.க்கு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த வழக்குடன் அஜித்குமார் மீதான திருட்டு வழக்கையும் சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள காளி கோயில் காவலாளி நகை திருட்டு குற்றச்சாட்டின் பேரில் தனிப்படை காவலர்களால் சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் குறித்து உயர்நீதிமன்ற மதுரை அமர்வு, மதுரை மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷை விசாரணை அதிகாரியாக நியமனம் செய்தது. இந்நிலையில் இந்த விசாரணையின் இடைக்கால அறிக்கையை விசாரணை அதிகாரி நேற்று (ஜூலை 8) நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

இந்த வழக்கில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஹென்றி திபேன், நேற்றைய உயர்நீதிமன்ற விவாதம் குறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில், ”சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கப்பட்ட ஸ்டெர்லைட் வழக்கு நேற்று ஏழாவது ஆண்டை தொட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. அதே போன்றுதான் சாத்தான்குளம் வழக்கு. ஆகையால், தமிழகத்தில் உள்ள நேர்மையான காவல்துறை அதிகாரிகளை கொண்டு இந்த விசாரணை மேற்கொள்ளலாம் என நாங்கள் நீதிமன்றத்தில் தெரிவித்தோம்.

சி.பி.ஐ. விசாரணையில் நீதிமன்றம் உறுதியாக இருந்தாலும், வருகின்ற ஆகஸ்ட் 20 ஆம் தேதிக்குள் சி.பி.ஐ. விசாரணையின் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட அஜித்குமாரின் குடும்பத்திற்கு அனைத்து நிவாரணங்களும் வழங்க வேண்டும். அதே நேரம், இதே வழக்கில் பாதிக்கப்பட்ட நபர்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம்” என்றார்.

முன்னதாக இந்த வழக்கில் நீதிபதிகள் தெரிவித்ததாவது., “மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் காவல் மரணம் வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி அரசு உத்தரவிட்டுள்ளது. சி.பி.ஐ. காவல் மரணம் வழக்குடன் அஜித்குமார் மீதான திருட்டு வழக்கையும் சேர்த்து விசாரிக்க வேண்டும். இந்த வழக்குகளை விசாரிக்கும் விசாரணை அதிகாரி மற்றும் விசாரணை குழுவில் இடம் பெறும் சி.பி.ஐ. காவலர்களையும் சி.பி.ஐ. இயக்குநர் ஒரு வாரத்தில் நியமிக்க வேண்டும். அஜித்குமாரின் முழுமையான பிரேதப் பரிசோதனை அறிக்கையை நீதித்துறை நடுவர் மன்றத்தில் ஒரு வாரத்தில் போலீஸார் தாக்கல் செய்ய வேண்டும். 

சி.பி.ஐ. விசாரணை அதிகாரி அஜித்குமார் வழக்கு தொடர்பான மாவட்ட நீதிபதி அறிக்கை மற்றும் அனைத்து ஆவணங்களையும், தடயங்களையும் உயர் நீதிமன்ற பதிவாளர் ஜெனரலிடம் பெற்றுக் கொள்ள வேண்டும். சி.பி.ஐ. விசாரணை அதிகாரி உடனடியாக விசாரணை தொடங்கி ஆக.20-க்குள் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும். சி.பி.ஐ. விசாரணைக்கு தேவையான அனைத்து வசதிகள் மற்றும் ஒத்துழைப்பை தென் மண்டல ஐஜி, மதுரை, சிவகங்கை மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் வழங்க வேண்டும். வழக்கின் அனைத்து சாட்சிகளுக்கும் சாட்சிகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்.” என உத்தரவிட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து