Idhayam Matrimony

மத்திய அரசை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொழிற்சங்கத்தினர் போராட்டம்

புதன்கிழமை, 9 ஜூலை 2025      தமிழகம்
CPI(M) 2025-03-21

சென்னை, மத்திய அரசை கண்டித்து நேற்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொழிற்சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாடு முழுவதும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். குறைந்தபட்ச ஊதிய உயர்வை அதிகரிக்க வேண்டும். பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், 42 தொழிலாளர் நல சட்டங்களை திரும்பபெற கோரி வலியுறுத்தியும் நேற்று இந்தியா முழுவதும் வேலை நிறுத்தம் போராட்டம் நடைபெற்றது.

தமிழ்நாட்டில் இந்த போராட்டத்துக்கு தி.மு.க.வின் தொழிற்சங்கமான தொ.மு.ச., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தொழிற்சங்கமான சி.ஐ.டி.யு., இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தொழிற்சங்கமான ஏ.ஐ.டி.யூ.சி., காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் உள்பட மற்ற கட்சிகளை சேர்ந்த தொழிற்சங்கங்கள் உள்பட 13 தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்தன.

இந்த நிலையில் சென்னையில் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் போரட்டம் நடைபெற்றன. சென்னை பேருந்து நிலையம் அருகே அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் மத்திய அரசை கண்டித்து பல்வேறு தொழிற்சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் தொழிற்சங்கத்தினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து