Idhayam Matrimony

210 தொகுதிகளில் வெற்றி குறித்து மக்கள் முடிவெடுப்பார்கள்: இ.பி.எஸ். குறித்த கேள்விக்கு துணை முதல்வர் உதயநிதி பதில்

புதன்கிழமை, 9 ஜூலை 2025      தமிழகம்
Udayanidhi-1 2023-10-15

Source: provided

கரூர் : தேர்தலில் 210 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என எடப்பாடி பழனிசாமி சொல்வதை, மக்கள்தான் முடிவெடுப்பார்கள் என்று கரூரில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கரூரில் கோவைச் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தி.மு.க. மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், மாநகர, பகுதி ஒன்றியச் செயலாளர்கள் ஆலோசனைக்கூட்டம் புதன்கிழமை பிற்பகல் நடைபெற்றது.

தி.மு.க. மாவட்டச் செயலாளரும், கரூர் சட்டப்பேரவை உறுப்பினருமான வி.செந்தில்பாலாஜி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் தமிழக துணை முதல்வரும், தி.மு.க. இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று இளைஞர் அணி நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கிப் பேசினார்.

கூட்டம் நிறைவடைந்து, கூட்டரங்கை விட்டு வெளியே வந்த தமிழக துணை முதல்வரிடம் செய்தியாளர்கள், தேர்தல் சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ள எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது தேர்தல் பரப்புரையில் 210 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று பேசி வருவது குறித்து கேள்வி எழுப்பியபோது, பதில் அளித்த அவர், அதற்காக நான் 220 தொகுதிகள் என்று சொல்ல வேண்டுமா? அவர்கள் அப்படித்தான் சொல்வார்கள். அதை மக்கள்தான் முடிவெடுப்பார்கள்.

நாங்கள் எங்கள் பணிகளை செய்து வருகிறோம். முதல்வர் மக்களை சந்தித்து வருகிறார். எதிர்க்கட்சித் தலைவர் அவர் பணியை செய்து வருகிறார் என்றார் அவர். பேட்டியின்போது கரூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் வி.செந்தில்பாலாஜி உடனிருந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து