எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து ஒரு சவரன் ரூ.72,000-க்கு விற்பனையானது.
இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே தங்கத்தின் விலை யாரும் எதிர்பார்க்காத வகையில் உயர்ந்தவாறு இருக்கிறது. பல்வேறு நாடுகளுக்கு இடையே திடீரென ஏற்படும் போர் பதற்றம் காரணமாகவும் தங்கம் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்து பின்னர் கணிசமாக குறைந்தது.
அந்த வகையில், கடந்த மாதம் 14-ந் தேதி வரலாறு காணாத வகையில் தங்கம் விலை உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,320-க்கும், ஒரு சவரன் ரூ.74,560-க்கும் விற்பனையானது. அதன் பின்னர் தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. நேற்றுமுன்தினம் ஒரு பவுன் ரூ.72 ஆயிரத்து 80-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்த சூழலில் தங்கத்தின் விலை நேற்று முன்தினம் சற்று உயர்ந்தது. ஒரு கிராம் தங்கம் ரூ.50 உயர்ந்து ரூ.9 ஆயிரத்து 60-க்கும், ஒரு பவுன் ரூ.400 உயர்ந்து ரூ.72 ஆயிரத்து 480-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் நேற்று தங்கம் விலை சற்று குறைந்து விற்பனையானது. அதன்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து ஒரு சவரன் ரூ.72,000-க்கு விற்பனையானது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.60 குறைந்து ஒரு கிராம் ரூ.9,000-க்கு விற்பனையானது. வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.120-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்திற்கும் விற்பனையானது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


