Idhayam Matrimony

அணிக்கு திரும்பினார் ஜோப்ரா ஆர்ச்சர்: இங்கிலாந்து அணி அறிவிப்பு

புதன்கிழமை, 9 ஜூலை 2025      விளையாட்டு
England 2024-05-14

Source: provided

லண்டன் : இந்தியா - இங்கிலாந்து இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று நடைபெறுவுள்ள நிலையில், இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஜோப்ரா ஆர்ச்சர் அணிக்கு மீண்டும் திரும்பியுள்ளார்.

அபார வெற்றி....

சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது.இரு அணிகள் இடையேயான 5 டெஸ்ட் தொடரில் லீட்சில் நடைபெற்ற முதல் போட்டியில் இங்கிலாந்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பர்மிங்காமில் நடந்த 2- வது டெஸ்டில் இந்தியா 336 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று பதிலடி கொடுத்தது.

பிளேயிங் லெவன்... 

இதனால் 1-1 என்ற சமநிலை  ஏற்பட்டுள்ளது. இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 3 வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று (10-ந்தேதி) தொடங்குகிறது. இந்நிலையில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் விளையாடும் இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் விவரம் வருமாறு: சாக் கிராவ்லே, பென் டக்கெட், ஓல்லி போப், ஹாரி ப்ரூக், பென் ஸ்டோக்ட்ஸ், ஜேம் ஸ்மித், கிறிஸ் வோஸ், பிரைடன் கார்சே, ஜோப்ரா ஆர்ச்சர், ஷோயிப் பாஷிர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். 52 மாத இடைவெளிக்கு பிறகு ஜோப்ரா ஆர்ச்சர் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளது குறிப்பிடத்தக்கது. காயம் காரணமாக கடந்த 2021-ம் ஆண்டு முதல் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து அவர் விலகி இருந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து