Idhayam Matrimony

கனிம வகைகளை பெற ஆஸி.யிடம் இந்தியா பேச்சுவார்த்தை

வியாழக்கிழமை, 10 ஜூலை 2025      இந்தியா
Central-government 2021 12-

புதுடெல்லி, ஆஸ்திரேலியாவிடம் இருந்து அரிய வகை கனிம வகைகளை பெற இந்தியா பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.

ஆஸ்திரேலியாவிடமிருந்து அரிய கனிம வகைகளை பெற இந்தியா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஆஸ்திரேலிய நாட்டில் செம்பு, யுரேனியம் போன்ற அரிய வகை கனிமங்கள் உள்ளன. சமாரியம், கடோலினியம், தெர்பியம், டைஸ்ப்ரோசியம், லுடேடியம் போன்ற கனிமங்கள் எலக்ட்ரிக் மோட்டார், பிரேக்கிங் சிஸ்டம்ஸ், செல்போன்கள், ஏவுகணை தயாரித்தலுக்குப் பயன்படுத்தப்படுகிறது.

எனவே, அவற்றை வெளிநாடுகளில் இறக்குமதி செய்து இந்தியா பயன்படுத்தி வருகிறது. அதேபோல் ஆஸ்திரேலியாவில் கிடைக்கும் அரிய வகை கனிமங்களை இறக்குமதி செய்வது தொடர்பாக ஆஸ்திரேலிய நாட்டு அரசுடன் இந்திய அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தின் வர்த்தகம் மற்றும் முதலீட்டு ஆணையர் மாலினி தத் டெல்லியில் கூறியதாவது: ஆஸ்திரேலியாவில் அதிக அளவில் செம்பு கனிமம் கிடைக்கிறது. இந்த கனிமங்களைப் பெறுவதற்கு பல்வேறு நாடுகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

அதைப் போலவே செம்பு கனிமத்தை இறக்குமதி செய்வது தொடர்பாக ஆஸ்திரேலிய அதிகாரிகளுடன் இந்திய அரசு பேசி வருகிறது. இதுதொடர்பாக விரைவில் ஆஸ்திரேலியாவில் உள்ள சுரங்க நிறுவனங்களுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தி, ஒப்பந்தம் இறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கிறோம். ஆஸ்திரேலியாவில் உள்ள செம்பு கனிமத்தைப் பெற இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றன. ஆஸ்திரேலியாவில் அதிக அளவில் செம்பு கனிமம் வெட்டி எடுக்கப்படுகிறது. அதானி போன்ற நிறுவனங்கள் இந்தத் துறையில் அதிக முதலீடு செய்துள்ளன. எனவே, அங்கிருந்து கனிமத்தைப் பெற பல நிறுவனங்கள் பேச்சுவார்த்தையில் உள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து