Idhayam Matrimony

தமிழகத்தில் நிபா வைரஸ் இல்லை: பொதுசுகாதாரத்துறை

வெள்ளிக்கிழமை, 11 ஜூலை 2025      தமிழகம்
virus

Source: provided

சென்னை : தமிழகத்தில் 'நிபா' வைரஸ் இல்லை. மக்கள் பீதி அடைய தேவையில்லை என பொதுசுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு பொதுசுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கேரளாவின் பாலக்காடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் சமீபத்தில் 'நிபா' வைரஸ் நோய் தாக்கங்கள் பதிவாகி உள்ளதை தொடர்ந்து, தமிழ்நாடு அரசு நோய் பரவல் நிலைமையை தீவிரமாக கண்காணித்து வருகிறது. மேலும், தமிழ்நாடு அரசு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.

தமிழகத்தில் இதுவரை எந்தவித 'நிபா' வைரஸ் நோய் தாக்கங்கள் பதிவாகவில்லை என்றாலும், பொது மக்கள் பதற்றமின்றி விழிப்புடன் இருந்து அடிப்படை பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். கேரளாவை ஒட்டியுள்ள மாவட்டங்களை, சிறப்பு கவனம் செலுத்தி தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

மேலும், இந்த மாவட்டங்களில் உள்ள மருத்துவ குழுக்கள் சந்தேகத்திற்கிடமான நோய் தொற்றுகளை முன்கூட்டியே கண்டறிந்து செயல்பட தயார் நிலையில் உள்ளனர். தமிழ்நாடு அரசு அனைத்து விதமான நோய் பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. எனவே, 'நிபா' வைரஸ் குறித்து மக்கள் பீதி அடைய தேவையில்லை.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 7 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 7 hours ago
View all comments

வாசகர் கருத்து