Idhayam Matrimony

வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் கனடா நாட்டு பொருட்களுக்கு 35 சதவீத வரி: டிரம்ப் அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, 11 ஜூலை 2025      உலகம்
Trump-2024-04-16

Source: provided

வாஷிங்டன் : ''ஆகஸ்ட் 1ம் தேதி முதல் கனடா பொருட்களுக்கு 35 சதவீத வரி அமலுக்கு வரும்'' என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் 2ம் தேதி இந்தியா உட்பட பல்வேறு நாடுகளின் மீதும் பரஸ்பர வரி விதித்த டிரம்ப், ஜூலை 9ம் தேதி வரை இந்த வரி விதிப்பை நிறுத்தி வைத்திருந்தார். சில தினங்களுக்கு முன் அவர், அனைத்து நாடுகளின் மீதான பரஸ்பர வரி விதிப்புக்கான கெடுவை ஆகஸ்ட் 1ம் தேதி வரை நீட்டிப்பதாக அறிவித்தார்.

இதற்கிடையே, வங்கதேசம், மலேசியா, ஜப்பான் உள்ளிட்ட 14 நாடுகளுக்கு பரஸ்பர வரி விதிக்கப்படுவதாக அதிபர் டிரம்ப் கையெழுத்திட்ட கடிதங்கள் அனுப்பப்பட்டன. இந்த வரி விதிப்பு அடுத்த மாதம் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. பின்னர், பிரேசிலுக்கு 50 சதவீத வரி விதித்து டிரம்ப் உத்தரவிட்டார்.

இந்நிலையில், ''ஆகஸ்ட் 1ம் தேதி முதல் கனடா பொருட்களுக்கு 35 சதவீத வரி அமலுக்கு வரும்'' என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார். இது குறித்து டிரம்ப் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: அமெரிக்காவிற்குள் போதைப்பொருள் கடத்தப்படுவதை தடுப்பதில் கனடா தோல்வி அடைந்துவிட்டது.

இதனால் கனடா பொருட்களுக்கு ஆகஸ்ட் 1ம் தேதி முதல் 35 சதவீத வரி விதிக்கப்படுகிறது. இந்த வரி விதிப்புகளை கனடா எற்றுக்கொள்ளாமல் வரி அதிகரிப்பு நடவடிக்கைகளை எதிர்த்தால் கடுமையான விளைவுகளை சந்திக்கும். இவ்வாறு டிரம்ப் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து