எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : குரூப் 4 தேர்வுக்கான வினாத்தாள் கசியவில்லை என டி.என்.பி.எஸ்.சி. தலைவர் விளக்கமளித்துள்ளார்.
தமிழக அரசின் பல்வேறு துறைகளில் உள்ள குரூப் 4 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு டி.என்.பி.எஸ்.சி. நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி இந்த போட்டி தேர்வு இன்று காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை நடைபெற உள்ளது. 38 மாவட்டங்களிலும் 314 இடங்களில் தேர்வுகள் நடைபெறுகின்றன. இதற்காக மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கருவூலத்தில் இருந்து வினாத்தாள்கள் அனுப்பி வைக்கும் பணிகள் பலத்த பாதுகாப்புடன் நடைபெற்றன. இந்த முறை வினாத்தாள்கள் தனியார் பேருந்துகளில் அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் தனியார் பஸ்களின் கதவு மற்றும் அவசர வழி கதவுகளுக்கு பேப்பர் சீட ஒட்டி சீல்வைத்து பாதுகாப்பு வினாத்தாள்கள் அனுப்பி வைத்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மேலும் தனியார் பஸ்களில் எடுத்து செல்வதால் வினாத்தாள் கசிய வாய்ப்பு உள்ளதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகின. இது தேர்வர்கள் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
குரூப் 4 தேர்வுக்கான வினாத்தாள் கசியவில்லை என்று டி.என்.பி.எஸ்.சி. விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக, டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பிராபகர் கூறியதாவது:- டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வுக்கான வினாத்தாள் கசியவில்லை; தேர்வர்கள் அச்சப்பட தேவையில்லை. தனியார் பேருந்துகள் மூலம் வினாத்தாளை எடுத்துசென்றது குறித்து விளக்கம் கோரப்பட்டுள்ளது என்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


