எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
விழுப்புரம் : கூட்டணி இல்லை என்றால் தி.மு.க. இல்லை. கூட்டணி இருந்தாலும், இல்லையென்றாலும் பலமாக இருக்கும் கட்சி அ.தி.மு.க. என எடப்பாடி பழனிசாமி பேசினார்.
திண்டிவனத்தில் நேற்று இரவு நடைபெற்ற ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ பிரச்சார பயணத்தில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சிறப்பு ரையாற்றினார். அப்போது அவர் பேசும்போது, தேர்தல் வந்தால் தான் மக்களை, மற்ற நேரங்களில் வீட்டு மக்களை மட்டுமே நினைப்பவர் ஸ்டாலின். கூட்டணியை நம்பி தி.மு.க. உள்ளது. கூட்டணி இல்லை என்றால் தி.மு.க. இல்லை. கூட்டணி இருந்தாலும், இல்லையென்றாலும் அ.தி.மு.க. பலமாக இருக்கும்.
எதிர்க் கட்சிகள் மூக்கின் மீது விரல் வைக்கும் அளவுக்கு அ.தி.மு.க.வின் ஆட்சி இருந்தது. இம்மியளவும் குறை இல்லை. தி.மு.க. ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது. மக்களுக்கு பாதுகாப்பு இல்லை. ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஓரே ஆட்சி, தி.மு.க. ஆட்சிதான். டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடி ஊழல் நடைபெற்றுள்ளது.
அமலாக்கத்துறை ரெய்டுக்கு தூக்கத்தை தொலைத்து அமைச்சர்கள் அச்சத்தில் உள்ளனர். தி.மு.க.வில் ஜனநாயகம் இல்லை. 4 ஆண்டுகள் முடிந்துவிட்டது, இப்போதாவது நீட் தேர்வு ரத்து ரகசியத்தை மக்களுக்கு உதயநிதி சொல்ல வேண்டும். 2026-ல் தி.மு.க.அரசுக்கு பை பை என மக்கள் சொல்ல தயாராகி விட்டனர்” என்று தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


