Idhayam Matrimony

அழுத்தத்தைக் கையாள தோனியிடம் கற்றுக் கொண்டேன்: தீப்தி சர்மா

வெள்ளிக்கிழமை, 11 ஜூலை 2025      விளையாட்டு
Dhoni 2024-03-12

Source: provided

லண்டன் : அழுத்தத்தைக் கையாள்வதை தோனியிடமிருந்து கற்றுக் கொண்டதாக இந்திய வீராங்கனை தீப்தி சர்மா தெரிவித்துள்ளார்.

300-வது விக்கெட்...

இந்திய அணியின் ஆல்ரவுண்டரான தீப்தி சர்மா, இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் விளையாடி வருகிறார். அவர் அண்மையில் சர்வதேசப் போட்டிகளில் அவரது 300-வது விக்கெட்டினை வீழ்த்தி அசத்தினார்.

தோனியிடம்...

இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் விளையாடி வரும் நிலையில், அழுத்தத்தைக் கையாள்வதை தோனியிடமிருந்து கற்றுக்கொண்டதாக தீப்தி சர்மா தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது. இது தொடர்பாக அவர் பி.சி.சி.ஐ.யிடம் பேசியதாவது: போட்டியில் அழுத்தமான சூழல்களைக் கையாள்வது எப்படி என்பதை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியிடமிருந்து கற்றுக் கொண்டேன். 

அமைதியாக கையாண்டு...

தோனி விளையாடும்போதெல்லாம், தொலைக்காட்சி முன்பு அமர்ந்து, அவர் செயல்படும் விதத்தை கூர்ந்து கவனிப்பேன். எந்த ஒரு தருணத்திலும் அவர் அழுத்தத்தில் இருந்து நான் பார்த்ததில்லை. எந்த ஒரு சூழ்நிலையையும் அமைதியாக கையாண்டு போட்டியை முடித்துக் கொடுப்பார். என்னுடைய ஆட்டத்திலும் நான் அதனையே வளர்த்துக் கொண்டுள்ளேன்.

அழுத்தமுமின்றி... 

அனைத்து விஷயங்களையும் எளிதானதாக எடுத்துக் கொள்வேன். உதாரணமாக, பவர் பிளேவில் பந்துவீசுவதாக இருந்தாலும் சரி, அல்லது போட்டியின் இறுதிக்கட்டத்தில் பந்துவீசுவதாக இருந்தாலும் சரி அந்த பொறுப்பை எந்த ஒரு அழுத்தமுமின்றி ஏற்றுக்கொள்வேன். எனக்கு சவால்கள் பிடிக்கும். சவாலான சூழல்களில் அணிக்காக சிறப்பாக செயல்படுவது மிகவும் பிடிக்கும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து