Idhayam Matrimony

யுனெஸ்கோ பட்டியலில் செஞ்சி கோட்டை: அமைச்சர் தங்கம் தென்னரசு பெருமிதம்

சனிக்கிழமை, 12 ஜூலை 2025      தமிழகம்
Thangam 2024-09-14

Source: provided

சென்னை : செஞ்சி கோட்டை தமிழர்களின் கட்டிடக்கலை நுட்பத்தையும், வீரம் செறிந்த வரலாற்றையும் உலகுக்குப் பறைசாற்றுகிறது என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

யுனெஸ்கோ எனப்படும் ஐ.நா., சபையின் கல்வி, அறிவியல், கலாசார அமைப்பு, பாரம்பரிய சின்னத்தின் சரித்திர காலம், கலைபடைப்புத் தன்மை உள்ளிட்ட சிறப்புகளின் அடிப்படையில், சர்வதேச பாரம்பரிய நினைவு சின்னங்களுக்கு அங்கீகாரம் வழங்கி வருகிறது. 

இது தொடர்பாக தன் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 'யுனெஸ்கோ பாரம்பரிய சின்னங்களின் பட்டியலில் 2024 - 25ம் ஆண்டிற்கான பட்டியலில் மராத்திய கோட்டைகள் இடம்பெறுவது தொடர்பான முடிவு, ஐரோப்பிய நாடான பிரான்சின் பாரிசில் நடைபெற்று வரும் உலக பாரம்பரிய குழுவின் 47வது அமர்வின் போது எடுக்கப்பட்டது. இதன்படி, யுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்னங்களுக்கான பட்டியலில், மஹாராஷ்டிரா ராணுவ நிலப்பரப்புகளின் கீழ் வரும் அங்குள்ள சல்ஹெர், சிவனேரி, லோஹ்காட், கண்டேரி, ராய்காட், ராஜ்காட், பிரதாப்காட், சுவர்ணதுர்க், பன்ஹாலா, விஜய் துர்க், சிந்துதுர்க் கோட்டைகளும், தமிழகத்தில் உள்ள செஞ்சி கோட்டையும் இடம்பெற்றுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: செஞ்சி கோட்டை, தமிழ்நாட்டின் வீரமிக்க வரலாற்றையும், பண்பாட்டுப் பெருமையையும் உலகுக்கு எடுத்துரைக்கும் ஒரு மாபெரும் அரண் கட்டமைப்பு. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கோட்டையை உலக புராதன சின்னமாக அறிவித்திருப்பது, பெருமிதமும் மகிழ்ச்சியும் தருகிறது. இக்கோட்டையின் அழிவில்லாத கட்டமைப்பும், மூன்று மலைகளை அரணாகக் கொண்டு பரந்து விரிந்திருக்கும் அதன் வலிமையும், தமிழர்களின் கட்டிடக்கலை நுட்பத்தையும், வீரம் செறிந்த வரலாற்றையும் உலகுக்குப் பறைசாற்றுகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து