எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அரியலூர், கங்கைகொண்டசோழபுரத்தில் ராஜேந்திர சோழனின் பிறந்தநாளான ஆடித் திருவாதிரையன்று நடைபெறும் விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
அரியலூர் மாவட்டம் கங்கைகொண்டசோழபுரத்திலுள்ள பெருவுடையார் கோவில், மாமன்னர் ராஜேந்திர சோழனால் 1,000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாகும். இந்தக் கோவிலில், ராஜேந்திர சோழனின் பிறந்தநாளான ஆடித் திருவாதிரை நாளை, அரசு விழாவாக தமிழக அரசு 2023-ம் ஆண்டு முதல் கொண்டாடி வருகிறது. அன்றைய தினம் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு, கோவில் வளாகத்தில் கலை நிகழ்ச்சிகள், சொற்பொழிவுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
நடப்பாண்டு இந்த விழாவை மத்திய கலாசாரத் துறை சார்பில் 5 நாட்கள் கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது. ராஜேந்திர சோழனின் பிறந்தநாளான வருகிற 23-ந் தேதி மத்திய கலாசாரத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் விழாவை தொடங்கி வைக்கிறார். நிறைவு நாளான வருகிற 27-ந் தேதி பிரதமர் நரேந்திர மோடி விழாவில் பங்கேற்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
அன்றைய தினம் நடைபெறும் திருவாசகம் மாநாட்டில் பங்கேற்கும் பிரதமர் மோடி, கங்கை கொண்ட சோழபுரம் பெருவுடையார் திருக்கோவில் வடிவம் பொறிக்கப்பட்ட நினைவு நாணயத்தை வெளியிடுகிறார்
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


