எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
ஐதராபாத் : நம்முடைய சட்ட நடைமுறைகளில் சில திருத்தங்களை மேற்கொள்ள வேண்டிய அளவுக்கு அது சீர்கெட்டு காணப்படுகிறது என சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தெரிவித்துள்ளார்.
தெலுங்கானாவின் ஐதராபாத் நகரில் நள்சார் சட்ட பல்கலைக்கழகத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில் இந்திய சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் நேற்று கலந்து கொண்டார்.
தெலுங்கானா ஐகோர்ட்டின் தலைமை நீதிபதியான (பொறுப்பு) நீதிபதி சுஜோய் பால் முன்னிலை வகித்த இந்நிகழ்ச்சியில் முதல்வர் ரேவந்த் ரெட்டி, நீதிபதி பி.எஸ். நரசிம்மா ஆகியோரும் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியில் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி கவாய் பேசும்போது, நம்முடைய நாடும், சட்ட முறைகளும் தனித்துவ சவால்களை எதிர்கொண்டுள்ளன. வழக்கு விசாரணைகளில் காலதாமதங்கள் என்பது, சில சமயங்களில் பல தசாப்தங்களுக்கும் நீடிக்கிறது. சில வழக்குகளில், விசாரணை கைதிகளாகவே பல ஆண்டுகள் காலம் கழித்த பின்னர், அவர்கள் நிரபராதி என தெரிய வரும் பல வழக்குகளையும் நாம் பார்க்கிறோம். நம்முடைய சிறந்த திறமையானது, நாம் சந்திக்க கூடிய சிக்கலான விசயங்களுக்கு தீர்வு காண உதவ கூடும் என்றார்.
நம்முடைய சட்ட நடைமுறைகளில் சில திருத்தங்களை மேற்கொள்ள வேண்டிய அளவுக்கு அது சீர்கெட்டு காணப்படுகிறது என வேதனை தெரிவித்த அவர், எனினும், இந்த சவால்களை எங்களுடைய சக குடிமகன்கள் தீர்ப்பார்கள் என்ற நல்ல நம்பிக்கையுடன், மிக எச்சரிக்கையுடனும் இதனை கூறி முடிக்கிறேன் என்று அவர் பேசியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


