எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ராசிபுரம் நகராட்சியை கண்டித்து வரும் 16-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் நகராட்சியில் நிலவி வரும் பல்வேறு நிர்வாகச் சீர்கேடுகளால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி வாழ் மக்கள் புகார் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
ராசிபுரம் நகராட்சியில் மாதம் ஒருமுறை மட்டுமே குடிநீர் வழங்கப்படுவதால், மக்கள் குடிநீருக்காக அலையும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. தற்போதுள்ள ராசிபுரம் நகராட்சி பேருந்து நிலையத்தை தேவையில்லாமல் சுமார் 8 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள அணைப்பாளையம் என்ற கிராமத்திற்கு மாற்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில், ராசிபுரம் நகராட்சி வாழ் மக்களுக்கு நாள்தோறும் முறையாக குடிநீர் வழங்காத அரசு மற்றும் நகர மன்ற நிர்வாகத்தைக் கண்டித்தும்; மக்களின் குடிநீர் தேவையை போர்க்கால அடிப்படையில் நிறைவேற்றிடவும், பேருந்து நிலைய இடமாற்ற முயற்சியைக் கைவிடவும் வலியுறுத்தி, அ.தி.மு.க. நாமக்கல் மாவட்டத்தின் சார்பில் 16.7.2025 – புதன் கிழமை காலை 10 மணியளவில், கழக அமைப்புச் செயலாளரும், நாமக்கல் மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமானபி. தங்கமணி, அவர்கள் தலைமையில் ராசிபுரம் பஸ் நிலையம், எம்.ஜி.ஆர். சிலை அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


