Idhayam Matrimony

டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு: ஒரு காலி பணியடத்துக்கு 353 பேர் போட்டி

சனிக்கிழமை, 12 ஜூலை 2025      தமிழகம்
TNPSC-Exam1-2025-07-12

சென்னை, டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு நேற்று நடைபெற்ற நிலையில் 3,935 காலிப் பணியிடங்களுக்கு 13 லட்சத்து 89 ஆயிரம் பேர் தேர்வு எழுதுவது ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது. அதாவது, ஒரு காலிப் பணியிடத்துக்கு 353 பேர் போட்டிபோடுகின்றனர். 

தமிழக அரசுப் பணிகளில் கடந்த மே மாத நிலவரப்படி, 9 லட்சத்து 42 ஆயிரத்து 941 ஊழியர்கள் பணியாற்றி வந்தனர். அந்த மாதத்தில் மட்டுமே 58 வயதை கடந்த 8,100 ஊழியர்கள் ஓய்வு பெற்றனர். இப்படி ஒவ்வொரு துறைகளிலும் மாதந்தோறும் ஓய்வுபெறுவோரின் எண்ணிக்கை சராசரியாக இருப்பதால், காலிப் பணியிடங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இந்த காலிப் பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) மூலம் தேர்வு நடத்தி தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அந்த வகையில், நேற்று கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், வனக்காப்பாளர், வனக்காவலர் போன்ற 3,935 காலிப் பணியிடங்களுக்கு குரூப்-4 தேர்வு நடத்தப்பட்டது.

இந்தத் தேர்வை 5 லட்சத்து 26 ஆயிரத்து 553 ஆண்கள், 8 லட்சத்து 63 ஆயிரத்து 68 பெண்கள், 117 திருநங்கைகள் என மொத்தம் 13 லட்சத்து 89 ஆயிரத்து 738 பேர், தமிழ்நாடு முழுவதும் உள்ள 38 மாவட்டங்களில் 314 மையங்களில் தேர்வு எழுதுகின்றனர்.

3,935 காலிப் பணியிடங்களுக்கு 13 லட்சத்து 89 ஆயிரம் பேர் தேர்வு எழுதுவது ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது. அதாவது, ஒரு காலிப் பணியிடத்துக்கு 353 பேர் போட்டிபோடுகின்றனர். "கால் காசு சம்பளம் என்றாலும் அரசு உத்தியோகமாக இருக்க வேண்டும்" என்று பழங்காலந்தொட்டே கூறிவருவதை நாம் கேள்வி பட்டிருக்கிறோம். அதனால்தான் என்னவோ, அரசு வேலைக்கு இத்தனை பேர் மல்லுகட்டுகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து