Idhayam Matrimony

சிறிய பிரச்சனையை பெரிதுபடுத்த வேண்டாம்: வி.சி.க.வினருக்கு திருமாவளவன் அறிவுறுத்தல்

சனிக்கிழமை, 12 ஜூலை 2025      தமிழகம்
Thirumavalavan 2024 09 14

சென்னை,  சிறிய பிரச்சனையை பெரிதுபடுத்த வேண்டாம் என்று வி.சி.க.வினருக்கு திருமாவளவன் அறிவுறுத்தியுள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், தனது முகநுால் பக்கத்தில், நேரலையில் கூறியதாவது:-

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பொறுப்பாளர்கள், 3 மாவட்டச் செயலாளர்களை தவிர்த்து, ஒருங்கிணைந்த கலந்தாய்வு கூட்டத்தை நடத்துவதாக அறிகிறேன். இது, கட்சி விதிகளுக்கு முரணானது. மாவட்டச் செயலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க, நிர்வாகிகள் கோரிக்கை மனு அளித்தனர். புகார் பரிசீலனையில் இருக்கிறது. புகார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால், 144 மாவட்டச் செயலாளர்களையும் நீக்க வேண்டியது இருக்கும்.

பாதிக்கப்பட்ட மக்களுக்காக போராடும் கட்சி, உயிர்ப்போடு இருக்கும். தினமும் மக்களை சந்தித்து, அவர்களின் பிரச்சனைகளை வரிசைப்படுத்தி, அவற்றை தீர்க்க செயல் திட்டங்களை வரையறுக்க வேண்டும். எந்த ஊரை எடுத்துக்கொண்டாலும், மனை பட்டா கோருவது பிரச்சனையாக உள்ளது. விளிம்பு நிலை மக்களுக்கு பட்டா வழங்குவது போன்ற பிரச்சனைகளில், நாம் கவனம் செலுத்த வேண்டும். சிறிய பிரச்சனைகளை பெரிதுபடுத்தினால், நான் கட்சியையே நடத்த முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து