Idhayam Matrimony

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் 7 மீனவர்கள் கைது

ஞாயிற்றுக்கிழமை, 13 ஜூலை 2025      தமிழகம்
Fishermen 2025-07-13

Source: provided

ராமேசுவரம் : எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி, தமிழக மீனவர்கள் 7 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். மேலும், அவர்கள் சென்ற படகையும் பறிமுதல் செய்துள்ளனர்.

ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து சுமார் 500 விசைப் படகுகளில் 3 ஆயிரம் மீனவர்கள் சனிக்கிழமை (நேற்று முன்தினம்) கடலுக்குச் சென்றனர். இதில் ஈசாக் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் ரூதர், சண்முகம், எடிசன், சக்திவேல், ஜெகதீஷ், டல்வின் ராஜ், அன்பழகன் ஆகிய 7 மீனவர்கள் நெடுந்தீவு அருகே உள்ள கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, அங்கு வந்த் இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி 7 பேரையும் கைது செய்தனர்.

சிறைப்பிடிக்கப்பட்ட 7 மீனவர்களும் காங்கேசன் துறை கடற்படை முகாமிற்கு கொண்டு சென்று அந்நாட்டு மீன்வளத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். தொடர்ந்து 7 மீனவர்களையும், ஊர்காவல்துறை நீதிபதியின் வீட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, யாழ்ப்பாணம் சிறையில் (நேற்று) ஞாயிற்றுக்கிழமை மாலை அடைக்கப்பட்டனர்.

இதேபோல், சனிக்கிழமை இரவு கச்சத்தீவுக்கும் நெடுந்தீவுக்கும் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்த மரிய சீரோன் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகை சிறைப்பிடிக்க முயன்ற இலங்கை கடற்படை ரோந்துப் படகு, மீனவர்களின் விசைப்படகு மீது மோதியதில் விசைப்படகின் பின் பகுதி உடைந்து சேதமடைந்தது.

அப்படகில் இருந்த ஸ்டாலின், முனீஸ்வரன், வியாகுலம், கொலம்பஸ், நாகேஷ், ஸ்டீபன், சரத்குமார் ஆகிய ஏழு மீனவர்களும் அதிர்ஷடவசமாக தப்பி ராமேசுவரம் மீன்பிடி துறைமுகம் வந்தடைந்தனர். மேலும், கடந்த ஒரு மாதத்தில் ராமேசுவரம் மீனவர்களின் மூன்று விசைப்படகுகளை கைப்பற்றி, இலங்கை கடற்படையினர் 22 மீனவர்களையும் கைது செய்துள்ளது குறிப்பிடதக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து