முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காவலாளி மரணத்துக்கு நீதி கேட்டு சென்னையில் த.வெ.க. ஆர்ப்பாட்டம் - விஜய் பங்கேற்பு

ஞாயிற்றுக்கிழமை, 13 ஜூலை 2025      தமிழகம்
Vijay 2025-07-13

Source: provided

சென்னை : திருப்புவனம் காவலாளி மரணத்துக்கு நீதி கேட்டு சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் த.வெ.க. தலைவர் விஜய் பங்கேற்றார் 

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தலைமையில் திருப்புவனம் காவல் நிலைய லாக்அப் மரணத்தை கண்டித்தும், கொலைக்கு நீதி வேண்டியும் நேற்று சென்னையில் அவர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், கடந்த 4 ஆண்டுகளில் லாக்அப் மரணங்களில் தங்கள் உறவுகளை இழந்தவர்களின் குடும்பத்தினரும் மேடையேற்றப்பட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டாத்தில் விஜய் பேசியது: “திருப்புவனம் மடப்புரம் அஜித்குமார் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவர். அந்தக் குடும்பத்துக்கு நடந்த கொடுமைக்கு முதல்வர் ஸ்டாலின் சாரி சொன்னார். நல்ல விஷயம்தான். ஆனால், உங்களின் ஆட்சியில் 24 பேர் காவல் நிலையங்களில் இறந்திருக்கின்றனர். அவர்களிடமும் சாரி சொல்லுங்கள். அவர்களுக்கும் நிதியுதவி வழங்குங்கள்.

சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றியபோது விமர்சித்தீர்களே.  இப்போது ஏன் இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றினீர்கள். இப்போதும் சி.பி.ஐ. ஆர்.எஸ்.எஸ். - பாஜகவின் கைப்பாவையாகத் தானே இருக்கிறது? நாங்கள் நீதிமன்றத்தின் மேற்பார்வையில் சிறப்புப் புலனாய்வுக் குழுவின் விசாரணை கேட்டதால், பயந்து போய் சி.பி.ஐ.க்கு மாற்றியிருக்கிறீர்கள். ஏன் ஒன்றிய அரசின் பின்னால் ஒளிந்து கொள்கிறீர்கள்?

அண்ணா பல்கலை. மாணவி வழக்கு முதல் அஜித்குமார் வழக்கு வரை எல்லாவற்றுக்கும் நீதிமன்றம் தலையிட்டு கேள்வி கேட்கிறது. நீதிமன்றம்தான் கேள்வி கேட்க வேண்டும் என்றால், நீங்க எதுக்கு சார்? உங்க ஆட்சி எதுக்கு சார்? முதல்வர் பதவி எதுக்குங்க சார்? அதிகபட்சம் உங்ககிட்ட வர்ற பதில், 'சாரி மா, நடக்கக் கூடாதது நடந்துடுச்சு மா' என்பதுதானே.. இந்த வெற்று விளம்பர மாடல் தி.மு.க. சர்க்கார், இப்போ சாரி மா மாடல் சர்க்காரா மாறிடுச்சு.

நீங்க செய்த எல்லா தவறுகளுக்கும் பரிகாரமா சட்டம் - ஒழுங்கை நீங்களே சரிசெஞ்சாகணும். இல்லன்னா, மக்களோடு மக்களா நின்று உங்களை சரி செய்ய வைப்போம். தவெக சார்பில் அதற்கு உண்டான போராட்டங்கள் நடத்தப்படும்” என்று காட்டமாக பேசினார் விஜய்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து