முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: 9-வது முறையாக 2 அணிகளும் ஒரே ஸ்கோர்: இந்தியா சாதனை

ஞாயிற்றுக்கிழமை, 13 ஜூலை 2025      விளையாட்டு
00

Source: provided

லண்டன்: இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையேயான லார்ட்ஸ் டெஸ்டில் முதல் இன்னிங்சில் இரு அணிகளும் 387 ரன் குவித்தது. டெஸ்ட் வரலாற்றில் முதல் இன்னிங்சில் ஸ்கோர் சமநிலையில் இருப்பது இது 9-வது முறையாகும். 

ஜோ ரூட் சதம்...

இங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி லார்ட்சில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 387 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. சிறப்பாக ஆடிய ஜோ ரூட் சதமடித்து 104 ரன்னில் அவுட்டானார். இந்தியா சார்பில் பும்ரா 5 விக்கெட்டும், சிராஜ், நிதிஷ் குமார் ரெட்டி தலா 2 விக்கெட்டும், ஜடேஜா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

387 ரன்கள்...

இதையடுத்து, இந்திய அணி முதல் இன்னிங்சில் 387 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. சிறப்பாக ஆடிய கே.எல்.ராகுல் சதமடித்து 100 ரன்னில் அவுட்டானார். இங்கிலாந்து சார்பில் கிறிஸ் வோக்ஸ் 3 விக்கெட்டும், பென் ஸ்டோக்ஸ், ஜோப்ரா ஆர்ச்சர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து 2 ஆவது இன்னிங்சில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 3 ஆம் நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 2 ரன்கள் எடுத்திருந்தது.

9-வது முறை...

இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையேயான லார்ட்ஸ் டெஸ்டில் இரு அணிகளும் முதல் இன்னிங்சில் 387 ரன் குவித்தது. டெஸ்ட் வரலாற்றில் முதல் இன்னிங்சில் ஸ்கோர் சமநிலையில் இருப்பது இது 9-வது முறையாகும். இந்தியாவுக்கு 3-வது நிகழ்வாகும். இதற்கு முன்பு 1958-ம் ஆண்டு வெஸ்ட் இண்டீசுடனும் (222 ரன்), 1986-ம் ஆண்டு இங்கிலாந்து டனும் (390 ரன்) முதல் இன்னிங்சிலும் ஸ்கோர் சமநிலையாக இருந்தது.

350 ரன்னுக்கு மேல்...

இந்த தொடரில் இந்திய அணி தொடர்ந்து 5-வது இன்னிங்சில் 350 ரன்னுக்கு மேல் எடுத்துள்ளது. முதல் டெஸ்டில் 471 மற்றும் 364 ரன்னும் 2-வது டெஸ்டில் 587 மற்றும் 427 ரன்னும் குவித்தது. லார்ட்ஸ் டெஸ்டில் முதல் இன்னிங்சில் 387 ரன் எடுத்தது. இங்கிலாந்தில் இந்தியாவுக்கு 2-வது நிகழ்வாகும். இதற்கு முன்பு 2002-ம் ஆண்டு தொடரில் 5 இன்னிங்சில் தொடர்ந்து 350 ரன்னுக்கு மேல் எடுத்து இருந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து