Idhayam Matrimony

மாரத்தான் வீரர் பவுஜா சிங் விபத்தில் வெளிநாடு வாழ் இந்தியர் கைது

புதன்கிழமை, 16 ஜூலை 2025      இந்தியா
Jail

Source: provided

பஞ்சாபை : பஞ்சாபைச் சேர்ந்த 114 வயது மாரத்தான் ஓட்டப்பந்தய வீரர் பவுஜா சிங். பியாஸ் கிராமத்தில் நடைபயிற்சியில் ஈடுபட்டு இருந்த போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பலியானார். பவுஜா சிங் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் அவரின் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், விளையாட்டு வீரர்கள் இரங்கல் வெளியிட்டு இருந்தனர். இந் நிலையில், பவுஜா சிங் மீது கார் ஏற்றிக் கொன்ற சம்பவத்தில் அம்ரித்பால் சிங் தில்லான் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இவர் வெளிநாடு வாழ் இந்தியர் ஆவார். அவரது சொந்த ஊரான கர்தார்பூரில் வைத்து போலீசாரால் கைது செய்யப்பட்டார். இவர் அண்மையில் தான் கனடாவில் இருந்து சொந்த ஊர் திரும்பி இருந்தார். சம்பவ பகுதியில் பதிவான சிசிடிவி கேமராவில் இருந்த காட்சிகளை கொண்டு விசாரணை நடத்திய போது விபத்தை ஏற்படுத்திய காரையும், அதன் பதிவு எண்ணையும் அடையாளம் கண்டனர். கபூர்தலாவைச் சேர்ந்த வரிந்தர் சிங் என்பவரின் கார் என்பதை கண்டுபிடித்த போலீசார், அவரின் கிராமத்துக்கே சென்று அவரிடம் விசாரணை நடத்தினர்.

2 ஆண்டுகளுக்கு முன்பாக அவர் கர்தார்பூரைச் சேர்ந்த அமிர்தபால் சிங் தில்லான் என்பவரிடம் காரை விற்றுவிட்ட தகவலை தெரிவித்துள்ளார். கார் வாங்கி இருந்தாலும் அதன் ஆவணங்களை தம் பெயருக்கு மாற்றாமல்,வரிந்தர் சிங் பெயரிலேயே அமிர்தபால் சிங் தில்லான் பயன்படுத்தி இருக்கிறார். விபத்து நிகழ்ந்த நேரத்தில் அவர் தான் சொகுசு காரை ஓட்டிச் சென்று பவுஜா சிங் மீது மோதியது விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவரை கைது செய்துள்ள போலீசார், மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் சென்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து