எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
வாஷிங்டன் : ஏர் இந்தியா விமான விபத்து செய்தி விவகாரத்தில் சர்வதேச ஊடகங்களுக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
கடந்த மாதம் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் 171 விபத்துக்குள்ளானதில் 260 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த கோர விபத்து குறித்து இந்திய விமான விபத்து விசாரணை பணியகம் தீவிர விசாரணை நடத்தி, சமீபத்தில் முதற்கட்ட அறிக்கையை வெளியிட்டது. இந்த அறிக்கையைத் தொடர்ந்து, சில சர்வதேச ஊடகங்கள், அமெரிக்காவின் ‘வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’, விமானத்தின் ‘காக்பிட்’ குரல் பதிவுக் கருவியில் பதிவான உரையாடல்களை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டன.
அதில், விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் கேப்டன் எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்சுகளை அணைத்திருக்கலாம் என்றும், இதனால் விமானி அறையில் குழப்பமும், பீதியும் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டிருந்தது. இந்த செய்தி, விபத்துக்கான காரணம் குறித்து பல்வேறு யூகங்களையும், சர்ச்சைகளையும் கிளப்பியது. சர்வதேச ஊடகங்களின் இந்த ஆதாரமற்ற செய்திக்கு அமெரிக்காவின் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அதன் தலைவர் ஜெனிபர் ஹோமெண்டி வெளியிட்ட அறிக்கையில், ‘ஏர் இந்தியா விமான விபத்து குறித்த வெளியாகும் சர்வதேச ஊடக செய்திகள் யூகத்தின் அடிப்படையிலானவை. இந்தியா தரப்பில் முதற்கட்ட அறிக்கையை மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. எனவே, அதிகாரப்பூர்வ இறுதி அறிக்கை வரும் வரை காத்திருக்க வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


