எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
வாஷிங்டன் : பிரிக்ஸ் அமைப்பினர் டாலரை கைப்பற்ற முயற்சி செய்கின்றனர் என்று தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், பிரிக்ஸ் அமைப்பு அமெரிக்க டாலரின் உலகளாவிய ஆதிக்கத்தை குறைத்து மதிப்பிட முயற்சி செய்கிறது என குற்றம் சாட்டி உள்ளார்.
இது குறித்து வெள்ளை மாளிகையில், நிருபர்கள் சந்திப்பில் டொனால்டு ட்ரம்ப் கூறியதாவது: பிரிக்ஸ் நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 10 சதவீதம் வரி விதிக்கப்படும். வளர்ந்து வரும் பொருளாதார கூட்டமைப்பு வேகமாக மறைந்து வருகிறது. பிரிக்ஸ் அமைப்பு அமெரிக்க டாலரின் உலகளாவிய ஆதிக்கத்தை குறைத்து மதிப்பிட முயற்சி செய்கிறது. அவர்கள் விரைவில் முடிவுக்கு வருவார்கள்.
எங்களுடன் விளையாட யாரையும் நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க முடியாது. பிரிக்ஸ் அமைப்பினர் டாலரை கைப்பற்ற முயற்சி செய்கின்றனர். எங்களுடன் விளையாட யாரையும் நாங்கள் ஒரு போதும் அனுமதிக்க முடியாது. பிரிக்ஸ் அமைப்பிற்கு ஒரு கடுமையான பொருளாதார சவாலை எதிர்க்கொள்ளும் ஒற்றுமை இல்லை. நாங்கள் நிறைய போர்களை நிறுத்தினோம். இந்தியாவும், பாகிஸ்தானும் தீவிரமாக மோதிக் கொண்டிருந்தன.
இவை இரண்டு தீவிர அணு ஆயுத நாடுகள், அவை ஒன்றையொன்று மோதிக் கொண்டிருந்தன. சமீபத்தில் ஈரானில் நாம் என்ன செய்தோம் என்பதைப் பார்த்தபோது, அவர்களின் அணுசக்தித் திறனை நாங்கள் தகர்த்து, அதை முற்றிலுமாகத் தகர்த்துவிட்டோம். ஆனால் இந்தியாவும், பாகிஸ்தானும் அதை நோக்கிச் சென்று கொண்டிருந்தன. அது பெரிதாகிக் கொண்டே இருந்தது. வர்த்தகத்தின் மூலம் அதைத் தீர்த்து வைத்தோம். இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


