Idhayam Matrimony

இந்தியா - பாகிஸ்தான் மோதலின் போது சுட்டு வீழ்த்தப்பட்ட 5 ஜெட் விமானங்கள் அதிபர் ட்ரம்ப் கருத்தால் பரபரப்பு

சனிக்கிழமை, 19 ஜூலை 2025      உலகம்
Trump 2023 03 05

வாஷிங்டன், இந்தியா - பாக். மோதலின் போது 5 ஜெட் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

குடியரசு கட்சியைச் சேர்ந்த செனட் உறுப்பினர்களுக்கு வெள்ளிக்கிழமை அளித்த இரவு விருந்தின்போது பேசிய டொனால்ட் ட்ரம்ப், “இந்தியாவும் பாகிஸ்தானும் சண்டையிட்டுக் கொண்டிருந்தன. அப்போது, போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. 4 அல்லது 5 விமானங்கள் வீழ்த்தப்பட்டன. ஆனால், 5 ஜெட் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன என நினைக்கிறேன். ஏனெனில், நிலைமை தொடர்ந்து மோசமாகிக் கொண்டே இருந்தது. இல்லையா?

இந்தியாவும் பாகிஸ்தானும் சண்டையை நிறுத்திக்கொள்வதில் முன்னும் பின்னுமாக இருந்தன. அது பெரிதாகிக்கொண்டே இருந்தது. வர்த்தகத்தின் மூலம் நாங்கள் அதை முடிவுக்குக்கொண்டு வந்தோம். அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்ய விரும்புகிறீர்கள். நீங்கள் ஆயுதங்களைக் கொண்டு தாக்கிக் கொள்வீர்கள் எனில், குறிப்பாக அணு ஆயுதத்தைப் பயன்படுத்துவீர்கள் எனில் உங்களுடன் நாங்கள் வர்த்தக ஒப்பந்தத்தில் ஈடுபட மாட்டோம் என கூறினேன். ஏனெனில், இரண்டு நாடுகளுமே சக்திவாய்ந்த அணுஆயுத நாடுகள்.

8 ஆண்டுகளில் எந்த அமெரிக்க நிர்வாகமும் சாதிக்க முடியாததை ஆறு மாதங்களில் நாங்கள் சாதித்துள்ளோம். இதற்காக நான் மிகவும் பெருமைப்படுகிறேன். நாங்கள் நிறைய போர்களை நிறுத்தி உள்ளோம். இவை கடுமையான போர்கள்” என தெரிவித்தார்.

அந்த 5 ஜெட் விமானங்கள் எந்த நாட்டுக்குச் சொந்தமானவை என்பது குறித்து அவர் எதுவும் தெரிவிக்கவில்லை. அமெரிக்கா சுட்டு வீழ்த்திய 5 ஜெட் விமானங்களால் ஏதேனும் ஒரு நாடு பாதிக்கப்பட்டதா அல்லது இரண்டு நாடுகளுமே பாதிக்கப்பட்டதா என்பது தெரியவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து