எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
வேளாங்கண்ணி : வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் எடப்பாடி பழனிசாமி மெழுகுவர்த்தி ஏற்றி சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டார்.
தமிழ்நாட்டின் டெல்டா மாவட்டங்களில் ”மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்" என்ற பெயரில் முன்னாள் முதல்வரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், நாகை மாவட்டத்திற்கு நேற்று முன்தினம் (ஜூலை 18) இரவு வருகை தந்த அவர், கீழ்வேளூர் சட்டப்பேரவைத் தொகுதியில் உரையாற்றினார்.
இதனைத் தொடர்ந்து, 2-வது நாளாக நேற்று (ஜூலை 19) வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் மெழுகுவர்த்தி ஏற்றி சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டார். அங்கு பேராலயம் சார்பில் இருதயராஜ் தலைமையிலான பங்குத்தந்தையர்கள் அவருக்கு வரவேற்பு அளித்தனர். வேளாங்கண்ணி பேராலயம் சார்பில் மாதா உருவப்படம் எதிர்கட்சி தலைவர் பழனிசாமிக்கு வழங்கப்பட்டது. இதையடுத்து, செருதூர் கிராமத்திற்கு சென்று மீனவ மக்களின் கோரிக்கைகளையும், குறைகளையும் கேட்டு அறிந்தார்.
தொடர்ந்து நம்பியார் நகர் மீன்பிடித் துறைமுகத்திற்குச் சென்று எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி பார்வையிட்டார். அப்போது அங்குத் திரண்டு இருந்த மீனவர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது, மீனவர்கள் மத்தியில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, அ.தி.மு.க. ஆட்சியில் நம்பியார் நகர் மீனவக் கிராமத்தில் அரசின் பங்களிப்பாக 24 கோடியும் மக்களின் பங்களிப்பாக 11 கோடி என 35 கோடி ரூபாயில் சிறு துறைமுகம் அமைக்கப்பட்டது. மீனவர்களின் அனைத்து கோரிக்கைகளும் ஏற்று, அ.தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.” என அவர் பேசியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


