Idhayam Matrimony

பாகிஸ்தானுக்கு எதிராக விளையாட இந்திய மூத்த வீரர்கள் மறுப்பு: லெஜெண்ட்ஸ் கிரிக்கெட் ரத்து

ஞாயிற்றுக்கிழமை, 20 ஜூலை 2025      விளையாட்டு
INDIA PAK 2025-05-03

Source: provided

மும்பை : இந்தியா - பாகிஸ்தான் நாடுகளைச் சேர்ந்த சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற மூத்த வீரர்கள் பங்கேற்கும் லெஜெண்ட்ஸ் கிரிக்கெட் ஆட்டம் ரத்தாகியுள்ளது.

இந்தியா சாம்பியன்ஸ்...

லெஜெண்ட்ஸ் உலக சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடர் கடந்த ஜூன் 18-ஆம் தேதி ஆரம்பித்தது. ஆகஸ்ட் 2-இல் இறுதி ஆட்டம் நடைபெற உள்ளது. யுவராஜ் சிங் தலைமையிலான இந்திய மூத்த வீரர்களின் ’இந்தியா சாம்பியன்ஸ்’ அணியில், ஷிகர் தவான், ஹர்பஜன் சிங், சுரேஷ் ரெய்னா, இர்பான் பதான், யூசுப் பதான், ராபின் உத்தப்பா, அம்பத்தி ராயுடு, பியூஷ் சாவ்லா, ஸ்டூவார்ட் பிண்னி, வருண் ஆரோன், வினய் குமார், அபிமன்யு மிதுன், சித்தார்த் கௌல், குர்க்க்ரீத் மான் ஆகிய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

பாகிஸ்தானுடன்...

இந்தநிலையில், லெஜெண்ட்ஸ் உலக சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 20) பர்மிங்ஹாமில் நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது. இந்த ஆட்டத்தில் இந்தியா சாம்பியன்ஸ் அணியில் இடம்பெற்றிருந்த ஷிகர் தவான், சுரேஷ் ரெய்னா உள்ளிட்ட சில முக்கிய வீரர்கள் விலகினர்.

ரத்து...

ஜம்மு காஷ்மீரின் முக்கிய சுற்றுலா தலமான பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தானே காரணம் என்று குற்றஞ்சாட்டி இந்திய மூத்த வீரர்கள் பாகிஸ்தானுக்கு எதிராக கிரிக்கெட் விளையாட மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் இந்த ஆட்டம் ரத்தாகியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து