Idhayam Matrimony

அமர்நாத் யாத்திரை: ஜம்முவில் இருந்து 20-வது குழு புறப்பட்டது

ஞாயிற்றுக்கிழமை, 20 ஜூலை 2025      இந்தியா
Amarnath

Source: provided

ஜம்மு : அமர்நாத் பனி லிங்கத்தை தரிசிக்க  ஜம்முவில் இருந்து 20-வது குழு புறப்பட்டது  

பனிமலைகள் சூழ்ந்த காஷ்மீர் அமர்நாத் குகைக்கோவிலில் இயற்கையாக உருவாகும் பனிலிங்கத்தை தரிசிக்க கடும் சிரமத்துக்கு மத்தியில் ஒவ்வொரு ஆண்டும் பக்தர்கள் பாதயாத்திரையாக வருகின்றனர். இந்த ஆண்டு அமர்நாத் யாத்திரை கடந்த 2-ந் தேதி தொடங்கியது. அடுத்த மாதம் (ஆகஸ்டு) 9-ந் தேதி வரை 38 நாட்கள் யாத்திரை நடைபெற இருக்கிறது. இந்தநிலையில் இந்த யாத்திரை, அனந்த்நாக் மாவட்டத்தில் 48 கி.மீ. தொலைவுள்ள நுன்வான்- பஹல்காம் பாரம்பரிய வழித்தடம், கந்தர்பால் மாவட்டத்தில் 14 கி.மீ. தொலைவுள்ள பால்டால் வழித்தடம் என இரு வழித்தடங்களில் நடைபெற்று வருகிறது.

நடப்பாண்டு ஜூலை 2-ஆம் தேதி தொடங்கிய அமர்நாத் யாத்திரையில் நேற்று 20-வது கட்டமாக 4,388 பேர் (ஜம்மு) பகவதி நகர் அடிப்படை முகாமிலிருந்து பனிலிங்கத்தைக் காண புறப்பட்டுள்ளனர். 115 வாகனங்கள் கொண்ட அணிவகுப்பில் 2,815 பக்தர்கள் பஹல்காமிற்கு புறப்பட்டாலும், 95 வாகனங்களில் 1,573 பக்தர்கள் பால்டால் பாதையை விரும்பினர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது, யாத்திரை இரண்டு வழித்தடங்களிலும் சீராக நடைபெற்று வருகிறது. மேலும் பக்தர்களின் எண்ணிக்கை இன்றைய தினம் 3 லட்சத்தைத் தாண்டும். இதுவரை, 2.90 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் இயற்கையாகவே உருவான பனி சிவலிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர். இவ்வாறு அவர் குறிப்பிட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து