Idhayam Matrimony

முதற்கட்ட பயணம் வெற்றி: தமிழக மக்களுக்கு இ.பி.எஸ். நன்றி

ஞாயிற்றுக்கிழமை, 20 ஜூலை 2025      தமிழகம்
Eps 2024-12-04

Source: provided

சென்னை : "மக்களை காப்போம் - தமிழகத்தை மீட்போம்" என்ற எனது முதற்கட்ட பயணத்தை வெற்றிகரமாக மாற்றி காட்டிய தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

'மக்களைக் காப்போம் - தமிழகத்தை மீட்போம்' என்கிற எனது முதற்கட்ட புரட்சிப் பயணத்தை, மக்கள் எழுச்சிப் பயணமாக மாற்றி, அதை இமாலய வெற்றிப் பயணமாக்கியதில் முழு பங்கும் தமிழக மக்களாகிய உங்கள் அனைவரையுமே சாரும். இந்த எழுச்சிப் பயணத்தை ஜூலை 7-ம் தேதி கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் தொகுதியில் ஆரம்பித்து,  தற்போது திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி வரை பிரச்சாரப் பயணத்தை தொடர்ந்து வருகிறேன். கோவை, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் 31 சட்டமன்றத் தொகுதிகளில் வெற்றிகரமாக சுமார் 12.5 லட்சம் மக்களை சந்தித்திருக்கிறேன்.

நான் சென்ற இடங்களிலெல்லாம் என்னை ஆர்வமுடன் சந்தித்த விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், நெசவாளர்கள், மீனவர்கள்,  இளைஞர்கள் உள்ளிட்டோர் தி.மு.க. ஆட்சியில் அவர்கள் சந்தித்து வந்த வேதனைகளை எடுத்துரைத்தனர்.

இவர்கள் எல்லோரும், " உங்களைச் சந்தித்ததில் ஆறுதல் அடைகிறோம். எங்கள் வேதனைகளுக்கு எல்லாம் விடிவுகாலம் வந்துவிட்டது" என தங்களின் வலிகளை மறைத்துக்கொண்டு, உளமார வரவேற்று என்னை அன்பில் நெகிழச் செய்தார்கள். மக்களின் ஆற்றல்மிக்க ஆதரவில் மூழ்கிப்போனேன்.

தமிழக மக்களின் உள்ளம் திமுக-வை வீட்டுக்கு அனுப்ப ஒன்றுபட்டுவிட்டது. அவர்கள் அடைந்திருக்கும் தாழ்வைப் போக்க சபதமேற்றுவிட்டது. நீங்கள் என்ன மடைமாற்றம் செய்தாலும் சரி, எனது எழுச்சிப் பயணம் தொடரும். மக்கள் ஆதரவு இன்னும் பெருகும். 2026-இல் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அமோக வெற்றி பெற்று, அனைத்து மக்களின் எண்ணங்களை நிறைவேற்றும் வகையில் நல் ஆட்சியை வழங்குவோம். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து