Idhayam Matrimony

வெடிகுண்டு மிரட்டல் எதிரொலி: சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் தாமதமாக இயக்கம்

ஞாயிற்றுக்கிழமை, 20 ஜூலை 2025      தமிழகம்
Air-India 1

Source: provided

சென்னை : சென்னை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து தீவிர சோதனை நடத்தப்பட்டது. இதனால் துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு இயக்கப்படும் விமானங்கள் தாமதமானது.

சென்னை விமான நிலைய மேலாளர் அறைக்கு நேற்று முன்தினம் வந்த ஒரு மர்ம இ-மெயில் தகவலில், சென்னை விமான நிலையத்தில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டு உள்ளதாகவும், எந்த நேரத்திலும் வெடித்து சிதறலாம் என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது. அந்த இமெயில் வெளிநாட்டில் இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதையடுத்து சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு சோதனைகள் தீவிரபடுத்தப்பட்டது. பயணிகள் பாதுகாப்பு சோதனையும் அதிகரிக்கப்பட்டது. இந்த சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரிந்தது. இந்த பரிசோதனைகள் காரணமாக சென்னையில் இருந்து வெளிநாடுகளுக்கு நேற்று புறப்பட்டு செல்லும் விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன. ஹாங்காங், பிராங்க் பார்ட், குவைத், துபாய், சார்ஜா, தோகா, மஸ்கட், சிங்கப்பூர், கோலாலம்பூர், லண்டன் உள்ளிட்ட விமானங்கள் சுமார் அரை மணி நேரத்தில் இருந்து ஒரு மணி நேரம் வரை தாமதமாக புறப்பட்டன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து