முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலக காவல் விளையாட்டு போட்டிகள்: பதக்கம் வென்றவர்களுக்கு தமிழ்நாடு டி.ஜி.பி. பாராட்டு

திங்கட்கிழமை, 21 ஜூலை 2025      தமிழகம்
DGP-2025-07-21

சென்னை, உலக காவல் மற்றும் தீயணைப்பு விளையாட்டு போட்டிகளில்  பதக்கம் வென்ற தமிழக காவலர்களுக்கு டி.ஜி.பி. சங்கர் ஜிவால் பாராட்டு தெரிவித்தார்.

உலக காவல் மற்றும் தீயணைப்பு விளையாட்டு போட்டிகள்-2025, அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில் கடந்த மாதம் 27-ம் தேதி முதல் இம்மாத 06-ம் தேதி வரை நடைபெற்றது. இப்போட்டியில் அகில இந்திய காவல்துறை விளையாட்டு அணி சார்பாக தமிழக காவல்துறையிலிருந்து காவலர்கள் தினேஷ், அர்ஜூன் மற்றும் ஹரிகிருஷ்ணன். பெண் காவலர்கள் இளவரசி மற்றும் சரண்யா ஆகியோர் பங்குப்பெற்று முறையே 3-தங்கம், 4-வெள்ளி மற்றும் 4-வெண்கலம் ஆக மொத்தம் 11 பதக்கங்களை வென்றுள்ளனர்.

மேலும், இதே போட்டியில் வயது வகைப் பிரிவில் காவல் கண்காணிப்பாளர்  மயில்வாகனனுடன் 6-ஆய்வாளர்கள், 1-சார்பு ஆய்வாளர், 1-சிறப்பு சார்பு ஆய்வாளர், 4-தலைமை காவலர் மற்றும் 3-பெண் தலைமை காவலர் ஆகியோர் பங்கு பெற்று முறையே 19-தங்கம், 11-வெள்ளி மற்றும் 9-வெண்கலம் ஆக மொத்தம் 39 பதக்கங்களை வென்று தமிழ்நாட்டிற்கும், தமிழக காவல்துறைக்கும் பெருமை சேர்த்துள்ளனர்.

மேற்கண்ட வீரர் மற்றும் வீராங்கனைகளை காவல்துறை தலைமை இயக்குநர். படைதலைவர். சங்கர் ஜிவால்  நேரில் அழைத்து பதக்கம் வென்ற அனைவரையும் பாராட்டினார். காவல்துறை தலைவர் (ஆயுதப்படை) விஜய குமாரி மற்றும் காவல்துறை தலைவர், (பொது) பிரவீன் குமார் அபினபு  ஆகியோர் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து