Idhayam Matrimony

அஜித்குமார் கொலை வழக்கு: சி.பி.ஐ. விசாரணைக்கு நிகிதா ஆஜர்

வியாழக்கிழமை, 24 ஜூலை 2025      தமிழகம்
Nigeetha 2025-07-08

மதுரை, திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் நிகிதா முதல்முறையாக நேரில் ஆஜரானார்.

சிவகங்கை மாவட்டம், மடப்புரம் காளியம்மன் கோவிலுக்கு ஜூன் 27-ம் தேதி தரிசனத்துக்காக நிகிதா என்ற பெண் சென்றுள்ளார். அப்போது அவரது நகை காணாமல் போனது குறித்த புகாரில் கோவில் காவலாளி அஜித்குமாரை விசாரணைக்கென தனிப்படை போலீஸார் அழைத்துச் சென்றனர். அவர்கள் தாக்கியதில் அஜித்குமார் உயிரிழந்தார். இக்கொலை தொடர்பாக தனிப்படை காவலர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டு, டெல்லி சி.பி.ஐ. பிரிவு டி.எஸ்.பி. மோகித்குமார் தலைமையிலான குழுவினர் விசாரித்து வருகின்றனர். சம்பவ இடம், திருப்புவனம் காவல் நிலையம், கோவில் என பல இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

இந்தநிலையில், திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில், அஜித்குமார் மீது புகார் அளித்த நிகிதா முதல்முறையாக மதுரை சி.பி.ஐ. அலுவலகத்தில் நேரில் ஆஜரானார். நிகிதாவிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து