Idhayam Matrimony

ஆயுதப்படைகளில் 1.09 லட்சம் காலியிடங்கள்: மத்திய அரசு

வியாழக்கிழமை, 24 ஜூலை 2025      இந்தியா
Central-government 2021 12-

புதுடெல்லி, ஆயுதப்படைகளில் 1.09 லட்சம் காலியிடங்கள் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 21-ந்தேதி தொடங்கியது. இதில் ஆபரேஷன் சிந்தூர், பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் போன்ற பிரச்சினைகள் பெரும் புயலை கிளப்பி வருகின்றன. இந்த பிரச்சினைகள் குறித்து விவாதிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கி வருவதால் 3-வது நாளாக இரு அவைகளும் முடங்கின.

இதற்கிடையில், மத்திய ஆயுதப்படைகள் மற்றும் அசாம் ரைபிள் படைகளில் உள்ள காலியிடங்கள் தொடர்பான கேள்விகளுக்கு மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் மாநிலங்களவையில் பதிலளித்தார்.

அதன்படி, 'துணை ராணுவப்படைகளில் வீரர்களின் எண்ணிக்கை கடந்த 2021-ம் ஆண்டில் இருந்த 10,04,980-ல் இருந்து 2025 ஜனவரி 1 நிலவரப்படி 10,67,110 ஆக அதிகரிக்கப்பட்டு உள்ளது. இதில் ஜனவரி 1-ந்தேதி நிலவரப்படி 1,09,868 காலியிடங்கள் உள்ளன. இதில் 72,689 இடங்களுக்கு ஆட்சேர்ப்பு பணிகள் நடந்து வருகிறது' என தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 7 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 7 hours ago
View all comments

வாசகர் கருத்து