எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில், இதுவரை 400க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி அருகே கடந்த 12ஆம் தேதி வட மாநில இளைஞரால் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் குறித்து விசாரணை நடத்த தனிப்படைகள் 30 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. குற்றவாளியை 30 தனிப்படைகளைச் சேர்ந்த 700க்கும் மேற்பட்ட காவலர்கள் தேடி வருகிறார்கள். இதுவரை 400க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடைபெற்றுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சந்தேகத்தின் அடிப்படையிலும், சம்பவம் நடந்தபோது, அங்கிருந்தவர்கள் என சந்தேகிக்கப்படும் இளைஞர்கள் என இதுவரை தனிப்படை போலீசார் 400க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தியிருக்கின்றனர். மேலும், குற்றவாளி குறித்து தகவல் தெரிவிக்க போலீசார் அறிவித்த செல்போன் எண்ணுக்கு 100க்கும் மேற்பட்ட அழைப்புகள் வந்துள்ளன என்றும் கூறப்படுகிறது. சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஒருவரிடம் நேற்று விசாரணை நடைபெற்று வந்தநிலையில், அவர் குற்றவாளி இல்லை என்பதை காவல்துறையினர் உறுதி செய்ததாகவும் கூறப்படுகிறது.
திருவள்ளூா் மாவட்டம், ஆரம்பாக்கத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளி குறித்து தகவல் அளிப்பவருக்கு ரூ.5 லட்சம் வெகுமதி அளிக்கப்படும் என தமிழக காவல் துறை தலைமை இயக்குநா் சங்கா் ஜிவால் அறிவிப்பு வெளியிட்டு, குற்றவாளியைத் தேடி வருகிறார்கள்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


