Idhayam Matrimony

ஆசியக் கோப்பை: அமீரகத்தில் இந்தியா - பாகிஸ்தான் போட்டி

வியாழக்கிழமை, 24 ஜூலை 2025      விளையாட்டு
BCCI 2023 06 13

Source: provided

மும்பை: ஆசியக் கோப்பைத் தொடரில் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ராஜீவ் சுக்லா பங்கேற்பு...

ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் வருடாந்திர பொதுக் கூட்டம் வியாழக்கிழமை (ஜூலை 24) வங்கதேசத்தின் டாக்காவில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஆசியக் கோப்பை தொடர் குறித்த முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.  இந்தக் கூட்டத்தில் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலைச் சேர்ந்த 25 நாடுகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்தியா சார்பில் பி.சி.சி.ஐ. துணைப் பொதுச் செயலர் ராஜீவ் சுக்லா கலந்துகொண்டார்.

அமீரகத்தில்...

இந்தியா - பாகிஸ்தான் இடையில் ஏற்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் மற்றும் போரை தொடர்ந்து இந்திய அணி, பாகிஸ்தானுடன் எந்தப் போட்டியிலும் விளையாடாது எனத் தெரிவித்திருந்தது. முன்னதாக பாகிஸ்தானில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி விளையாடாமல், இந்திய அணிக்கான போட்டிகள் மட்டும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்பட்டன. இந்த நிலையில், இந்தத் தொடரிலும் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற வாய்ப்புள்ளதாக ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஆசியக் கோப்பை...

இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 8 நாடுகள் பங்கேற்கும் ஆசியக் கோப்பைத் தொடர் செப்டம்பர் 10 ஆம் தேதி தொடங்கி 28 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. முன்னதாகவும் இந்தப் போட்டி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன், இலங்கை, ஆப்கானிஸ்தான், ஹாங்காங், வங்கதேசம் ஆகிய அணிகள் இந்தத் தொடரில் விளையாடவுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 19 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 19 hours ago
View all comments

வாசகர் கருத்து